Feb 05 2010

லங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்க ா உதவத் தயார் – பராக் ஒபாமா

http://eelamweb.com/index.php/component/content/article/47-featured-news/170-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE.html?Itemid=107

லங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்கா உதவத் தயார் – பராக் ஒபாமா

PDFPrintE-mail


Friday, 05 February 2010 15:41

obama.jpg - 47.52 Kbசமாதானமும்
வளம் மிக்கதுமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா உதவத் தயாராக
இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் சுதந்திர தினத்தை ஒட்டி அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

நீண்ட
நாட்களுக்குப் பின் அமைதியான ஒரு சூழலில் சிறிலங்கா சுதந்திர தினத்தைக்
கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ள ஒபாமா மனித
உரிமைகளுடன் கூடிய சமாதானமான நாடாக சிறிலங்கா மிளிர்வதற்கு ஒத்துழைப்பு
வழங்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No responses yet

Feb 05 2010

கொலைகளைப் புரிபவர்கள் கடவுளிடம் சரணடைகி றார்கள் – ரில்வின் சில்வா

  

http://eelamweb.com/

கொலைகளைப் புரிபவர்கள் கடவுளிடம் சரணடைகிறார்கள் – ரில்வின் சில்வா         

ந்தவிதமான அச்சமும் இன்றி பொதுமக்களை தெருக்களில் கொன்று குவித்தவர்கள்
இன்று வெள்ளையாடை அணிந்து பூத்தட்டுக்களை ஏந்திக் கொண்டு புத்தரைத்
தரிசித்துக் கொண்டு திரிவதாக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர்
ரில்வின் சில்வா குற்றம் சாட்டியுள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற
செய்தியாளர் மாநாட்டில் பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இடி
அமினின் ஆட்சிக்கு ஒப்பான அராஜக ஆட்சியே இன்று நடைபெறுவதாகவும் தமக்கு
எதிரான எவரையும் கொன்றொழிக்கும் நிலையே காணப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர்
தமது கட்சியின் பிரதேச சபை உறுப்பினரைக் கொன்றவர்கள் அரச ஆதரவுடன்
சுதந்திரமாக நடமாடுவதாகவும் குற்றம் சாட்டினார்.

            

No responses yet

Feb 05 2010

விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் விடு த்துள்ள அறிக்கை

http://www.lttepress.com/more3.html

01.01.2010

விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கை.

எமது மாவீரர்களின் தியாகங்களையும் எமது மக்களின்
சுயநிர்ணய உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தையும் மறுதலித்து எமது மக்களின்
மனங்களை புரிந்து கொள்ளாததும் கடந்த காலங்களில் நாம் எடுத்த முடிவுகள்தான்
இன்று எமது மக்களின் அவலத்திற்கு காரணம் எனவும் தமிழ் அரசியல் தலைவர்கள்
பேசுவது வேதனைக்குரியது ஒன்றாகும்.

ஏனெனில் கடந்த காலங்களில் எமது மக்களின் உரிமைகளுக்காக நாம் பல ஜனநாயக
முன்னெடுப்புகளை செய்தபோதும் சிங்கள பேரினவாத அரசு எம்மையும் எமது
மக்களையும் சர்வதேச மனித நேய அமைப்புகளையும் ஏமாற்றி வந்தது, இதை எமது
மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது வன்னி சமர்க்களத்தில் சிங்களஅரசு மட்டும் எம்முடன்
போரிடவில்லை. இரண்டு வல்லரசுகள் இணைந்த ஐந்து நாடுகள் தரை, கடல், வான் வழி
என மும்முனையில் கொடுஞ்சமரில் ஈடுபட்டன. தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை
சிங்கள அரசு எம்மீதும் மக்கள் மீதும் ஏவி பொருளாதர தடைகளை விதித்து பெரும்
இன அழிப்பில் ஈடுபட்டது.

எம்மையும் எம் விடுதலைப்போராட்டத்தையும் முழுவதும் துடைத்தெறிகின்ற
நோக்கிலேயே சிங்கள அரசுடன் வல்லாதிக்க சக்திகள் இணைந்து இன அழிப்பு போரை
நடாத்தின. இதனால் உலகிற்கு தெரியாத கொடும் படுகொலைகளும் அவலங்களும்
நடந்தேறியது.

இவ்வாறு கடந்த கால ஜதார்த்த நிலைகளை புரியாது விமர்சனங்களை முன்வைத்து
எமது தாயக விடுதலைப்போரையும் தியாகங்களையும் கொச்சைப்படுத்தி விலை பேசும்
தமிழ் அரசியல்வாதிகளை எமது மக்கள் இனம்கண்டு புரிந்து வைத்துள்ளனர்.

சிங்கள பேரினவாதம் எமது மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி
அதிகாரத்திற்கு வருவதற்கு வழிகோலும் வகையில் தமிழ் அரசியல் கட்சிகள்
செயற்படுவது அநீதியான செயலாகும்.

எமது மக்களின் சோகங்களையும், இழப்புகளையும், இழந்த உரிமைகளையும்
கருத்திற்கொள்ளாது பேரினவாத சக்திகளுக்கு துணைபோகும் அரசியல் கட்சிகளுக்கு
எமது மக்கள் தெளிவானதும் முடிவானதுமான தீர்ப்பினை வழங்குவார்கள்.

ஏனெனில் எமது மக்கள் காலத்தால் ஏற்பட்ட பெருந்துயர்களை மனதில் ஆழமாகப்
பதித்து வைத்தள்ளார்கள். நிதானித்து செயற்படக்கூடிய மாபெரும் சக்தியாக
மக்கள் உருவெடுத்துள்ளார்கள்.

எனவே எமது மக்கள் தீர்மானிக்கக்கூடிய தமது ஆற்றலை பேரினவாத சக்திகளுக்கு
வெளிப்படுத்தி தமது உரிமைகளை நிலைநாட்டுவதுடன் பேரினவாத சக்திகளுக்குள்
சோரம் போயுள்ள தமிழின அரசியல் தலைவர்களை இனம்காட்டுவதுடன் சிங்கள
அடக்குமுறையாளாகளால் ஏற்பட்ட கடந்த கால சோகங்களுக்கும் பதில்
கொடுப்பார்கள் என்பது நிச்சயம்
.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

தமிழீழ விடுதலைப்புலிகள்

தலைமைச் செயலகம்,

தமி

No responses yet

Feb 05 2010

இலங்கையில் தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக் கி கண்ணைக் கட்டி கையைக் கட்டி உதைத்துத் தள்ள ி சுட்டுக் கொல்கிறான் சிங்கள வெறியன். இதற்கு இந்தியாவும் உடந்தையாக உள்ளது.

"� உடையணியாமல் காட்டுமிராண்டித்தனமாக மனிதன் வாழ்ந்த காலத்தில் ஆடையணியும்
நாகரிகத்தைக் கொண்டு வந்தவனே தமிழன்தான். இலங்கையில் தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக்கி
கண்ணைக் கட்டி கையைக் கட்டி உதைத்துத் தள்ளி சுட்டுக் கொல்கிறான் சிங்கள வெறியன்.
இதற்கு இந்தியாவும் உடந்தையாக உள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதியும் பதவியே
பெரிதென்று இதற்குத் துணை போகிறார்.

"மரக்கலன்களைச் செலுத்திக் கடல் வணிகத்தைப் பெற்றுத் தந்தவனும் தமிழன்தான்.
இத்தகைய தமிழினம் ஈழத்திலே அழிந்து கொண்டிருந்தபோது இங்கு 61/2 கோடித் தமிழர்கள்
இருந்தும் என்ன செய்தோம். �நம் தலைநகரான டெல்லிக்கே வந்து இலங்கையில் போர்
நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ராசபக்சே துணிச்சலாகக் கூறினான். ஈழத்
தமிழர்களுக்கு எதிராகக் கேடுகள் செய்து இலங்கையில் யுத்தத்தை நடத்தியதே இந்திய
அரசுதான். ஈழத்தில் நடந்த இனப் படுகொலைக்கு இந்திய அரசுதான் காரணம்�"

31.02.2010 காலை நாகையிலிருந்து அந்தணப்பேட்டை சென்று தமிழர் தன்மானப் பேரவையின்
தலைவர் தோழர் அ.கோ.கஸ்தூரிரங்கன் (ஏ.ஜி.கே) அவர்களை அவர் வீட்டில் பயணக்குழுத்
தோழர்கள் சந்தித்தனர். அங்கிருந்து புறப்பட்டு சிக்கல், ஆவரானி-புதுச்சேரி,
வடக்காலத்தூர், தேவூர் வழியாக கீழவெண்மணி சென்றடைந்தனர்.

ஒன்றுபட்டத் தஞ்சை மாவட்டத்தில் கூலி உயர்வுக் கேட்டு அதைத் தர மறுத்த
நிலப்பிரபுத்துவ வர்கத்துக்கு எதிராகத் தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் சங்கம்
கண்டு செங்கொடியேந்தி உறுதியோடு போராடினர். இதன் விளைவாக ஆதிக்க வர்க்கம் 44
உயிர்களை ஒரே குடிசையில் உயிரோடு தீயிட்டுக் கொளுத்தியது. அந்த வெண்மணித்
தியாகிகளின் நினைவிடத்தில் பயணக் குழுவினர் வீர வணக்கம் செலுத்தி உறுதி மொழி
ஏற்றனர். இந்நிகழ்வில் வெண்மணியின் மூத்த தோழர் இராமையனும் கலந்து கொண்டார். அந்தப்
புனித மண்ணிலிருந்து இப்பயணத்திற்குக் கொடையாக ஒரு பிடி நெல் கேட்டோம். வசந்தா
எனும் அம்மையார் ஒரு பிடி நெல் எடுத்து வந்தார். தோழர் தியாகு அதைத் துண்டேந்தி
பெற்றுக் கொண்டார்.

நினைவிடம் முன்பு தோழர் தியாகு சொல்ல சொல்ல பயணக்குழுவினர் ஏற்ற உறுதிமொழி
இதுதான்:

"வர்க்கச் சுரண்டலுக்கும் வர்ண சாதி ஒடுக்குமுறைக்கும் எதிராகப் போராடி உயிருடன்
எரிக்கப்பட்ட வெண்மணியின் ஈகச் சுடர்களே! நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திற்கும் வர்ண
சாதி ஒடுக்குமுறைக்கும் முற்றுப்புள்ளி வைத்திடவும் தேசிய ஒடுக்குமுறையை
எதிர்த்துப் போராடி தமிழ்த் தேசியச் சமூக நீதிப் புரட்சியை நடத்தித் தமிழ்த் தேசிய
சமூக நீதிக் குடியரசு அமைக்கும் போராட்டத்திற்கு எம்மை முழுமையாக ஒப்புக் கொடுக்க
உங்கள் பெயரால் உறுதி ஏற்கிறோம்."

கீழவெண்மணியிலிருந்து புறப்பட்டு கீழ்வேளூர், சோழிங்கநல்லூர், திருமருகல்,
வடகரை, ஆண்டிபந்தல் வழியாக பயணக்குழுவினர் நன்னிலம் சென்றடைந்தனர். வழினெடுகிளும்
அறுவடையில் ஈடுப்பட்டிருந்த உழவர்களும், உழவுத் தொழிலாளர்களும் தமிழ் மீட்பு
நிதியத்திற்கு நெல் கொடுத்தனர். இன்று 03.02.2010 பயணத்தின் பத்தாம் நாள். இன்னும்
முப்பத்தேழு நாட்கள் மீதம் உள்ளன. இன்னும் 800 கிலோமீட்டருக்கு மேல் நடக்க
வேண்டியிருக்கும். 12.03.2010இல் குடந்தையில் பயணம் நிறைவடைவதற்கு முன் நூற்றுக்
கணக்கான ஊர்களுக்குச் சென்று இலட்சக் கணக்கான மக்களைச் சந்திக்க உள்ளது தமிழ்
மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப்பயணம்.

பயணத்தின் வெற்றிக்கும் தமிழ் மீட்பு நிதியத்தின் வளர்ச்சிக்கும் ஒல்லும்
வகையெல்லாம் உதவிட உலகத் தமிழர்கள் அனைவரையும் உரிமையுடன் வேண்டுகிறோம்.

 

No responses yet

Feb 04 2010

புதுமாத்தளனில் நடந்தது என்ன சரத் தாமதிப் பது ஏன் ?

புதுமாத்தளனில் நடந்தது என்ன சரத் தாமதிப்பது ஏன் ?

ஏதோ
நடக்காமல் உண்மைகளை வெளியிடுவேன் என்று சரத் பொன்சேகா கூறமாட்டார்.
நெருப்பில்லாமல் புகைக்க முடியாது.இந்திய பாதுகாப்பு செயலர் இலங்கைக்கு
அவசர விஜயம்..

தனக்கு ஏதாவது நடந்தால் உண்மைகளை வெளியிடுவேன் என்று சரத் பொன்சேகா
தெரியப்படுத்தியுள்ளார். அதிபர் தேர்தல் காலத்தில் எந்தளவு உண்மைகளை
வெளியிடலாம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இரு தரப்பும்
பிரச்சாரங்களை நடாத்தியமை பால்குடி பிள்ளையும் உணரக்கூடியதாக இருந்தது.
இப்போது தனக்கு ஏதாவது நடந்தால் உண்மைகளை வெளியிடுவேன் என்று சரத்
பொன்சேகா கூறியுள்ளார். தேர்தலில் வெளியிடக் கூடிய உண்மைகளை வரையறை
செய்தோர் இப்போது சரத்தை கைவிட்டு விட்டார்களா என்பதையே இது காட்டுகிறது.
தனது உயிரைப் பாதுகாக்கும்படி அவர் இந்தியா தவிர்ந்த மற்றய உலக நாடுகளிடம்
கோரிக்கை விடுத்துள்ளார். இன்று இலங்கை செல்லும் இந்திய பாதுகாப்பு செயலர்
இந்தப் புகையையும் பகையையும் போக்க முயலக்கூடும்.

புதுமாத்தளன் போரில் பாரிய மர்மமான நிகழ்வுகள் நடைபெற்றதாக மக்களிடையே
தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இது குறித்த உண்மைகள் வெளி வந்தாலும் அவை
பொய்போலவே மாறிவிடக் கூடியவாறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சகல
வதந்திகளும் மர்மக் கதைகள் போல ஊர்ஜிதம் செய்யப்படாதவாறு உலா வருகின்றன.
இதில் மறைந்திருக்கும் உண்மையும் பொய்யாகிவிடக்கூடிய அபாயமுள்ளது.

மர்மங்களில் முக்கியமானது வே. பிரபாகரனுக்கும் அவர் குடும்பத்தினரும்
எங்கே என்ற கேள்வியாகும். இதற்கான பதிலை தேர்தல் காலத்தில் வெளியிடாமல்
தேர்தலை நடாத்தியது சரத் பொன்சேகாவிற்கு பெரும் பின்னடைவை தந்தது. தற்போது
செல்வாக்கு இழந்துவிடக்கூடிய அபாயத்தில் உள்ள சரத் பொன்சேகா உண்மைகளை
வெளியிட்டால் சிறை செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார். இந்த நிலையில்
அவர் வழங்கியுள்ள கருத்துக்கள் வருமாறு.

தனக்கு ஏதாவது நேர்ந்தால் அரசாங்கத்தின் இரகசியங்கள் அம்பலப்படுத்தப்படும்
என படையதிகாரிகளின் முன்னாள் பிரதானியும் ஜனாதிபதித் தேர்தலில்
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா
எச்சரித்துள்ளதுடன் தன்னை தொந்தரவுக்குட்படுத்துவதை அரசாங்கம்
நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றிலேயே அவர் இந்த எச்சரிக்கையை
விடுத்தார்.ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடத் தீர்மானித்ததிலிருந்து
தன்னை தொந்தரவுக்குள்ளாக்கும் அரசாங்க அதிகாரிகளின் முறைகேடுகள் தொடர்பான
விபரமான ஆவணங்களை தாம் கோவைப்படுத்தியுள்ளதாகவும் சரத் பொன்சேகா
கூறியுள்ளார்.

எனக்கு ஏதாவது நேர்ந்தால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பவர்கள்
தொடர்பான விபரங்களையும் தேர்தல்களில் நடந்த பாரியளவிலான மோசடிகளையும்
வெளியிடுவேன் என சரத்பொன்சேகா கூறியுள்ளார்.

தனது அலுவலகம் அதிரடிப்படையினரால் சோதனையிடப்பட்டமை, தனது பாதுகாப்பு
முற்றாக குறைக்கப்பட்டமை, தனக்கு நெருக்கமான அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டமை
நீக்கப்பட்டமை அல்லது தொந்தரவுக்குட்படுத்தமை முதலான சம்பவங்கள் அரசாங்கம்
தன்னை கொல்லத் தயாராகிறது எனக் கருதச் செய்வதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்

“எனது பாதுகாப்புக்கு இருந்த 90 படைவீரர்களுக்கு பதிலாக 4 பொலிஸ்
உத்தியோகஸ்தர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் பிஸ்டல்கள் மாத்திரமே
உள்ளன. இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக ஓய்வு பெற்றவர்களும் எனக்கு
நெருக்கமானவர்களுமான 3 ஜெனரல்கள், 3 பிரிகேடியர்கள், 2 கேணல்கள் உட்பட பல
அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் லசந்தவின் கொலையுடன் தொடர்புடையவர் என அரசாங்கம்
கூறுகிறது. இது அப்பட்டமான பொய்யாகும். எனது அலுவலகத்தின் ஊழியர்கள் 20
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 23 கணனிகள் குற்றப்புலனாய்வு பொலிஸாரால்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் சட்டம் ஒழுங்கு குலைந்துள்ளது. யாரும் நீதிமன்றத்திற்கோ
பொலிஸுக்கோ செல்ல முடியாது. ஒருவர் எந்தவேளையிலும் கைது செய்யப்படலாம்.
ஊடக சுதந்திரம் இல்லை. தமது பணிகளைச் செய்வதில் அனைவரும் அழுத்தங்களை
எதிர்கொள்கின்றனர் என்றார்.

நாட்டைவிட்டுச் செல்ல முற்படுகிறீர்களா என வினவப்பட்டபோது”இப்போது
என்னிடம் வெளியேறும் திட்டம் எதுவுமில்லை. நான் இங்கிருந்து மக்களை
பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறேன். உயிரைப் பாதுகாப்பதற்காக மறைந்து
வாழவேண்டியிருந்தால் அதுவேறு விடயம். ஆனால் நானோ எனது குடும்பத்தினரோ
நாட்டைவிட்டு வெளியேற முடியாதவாறு விமான நிலையத்தில் கறுப்புப் பட்டியலில்
சேர்க்கப்பட்டுள்ளோம்” என பதிலளித்தார்.

தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரிட்டன், ஐரோப்பிய யூனியன்,
இந்தியா, அமெரிக்கா ஆகியன அரசாங்கத்தை கோரியுள்ளதாகவும் ஆனால் அரசாங்கம்
யார் சொல்வதையும் கேட்பதில்லை எனவும் சரத் பொன்சேகா கூறினார்.

ஜனாதிபதியைக் கொல்லவதற்கு திட்டமிட்டதாகக் குற்றம் சுமத்தப்படுவது
குறித்து சரத் பொன்சேகாவிடம் வினவப்பட்டபோது”எதிர்க்கட்சித் தலைவரை அல்லது
என்னை கொலை செய்ய திட்டமிடப்படுவதாக தகவல் கிடைத்தபின் நாம் எமது
பாதுகாப்புக்காகவே சினமன் லேக்சைட் ஹோட்டலில் 20 அறைகளை பதிவு செய்து
தங்கியிருந்தோம். இப்போது அரசாங்கம் கதையை மாற்ற முயற்சிக்கிறது”என சரத்
பொன்சேகா கூறினார்.

 ala

No responses yet

Next »


Video & Audio Comments are proudly powered by Riffly