இவற்றிற்கான களஞ்சியம் December, 2009

Dec 31 2009

2009 ஆம் ஆண்டு இறுதிநாளில் இன்று நீலப் பூரணை த்தினம் நிகழ்கிறது

http://www.tamilwin.com/view.php?22YpNcc3nW34ds2h202HQC4d30jZ0bj9E2e2SLV3b37GYe

2009 ஆம் ஆண்டு இறுதிநாளில் இன்று நீலப் பூரணைத்தினம் நிகழ்கிறது
[ வியாழக்கிழமை, 31 டிசெம்பர் 2009, 04:53.12 AM GMT +05:30 ]
2009
ஆம் ஆண்டின் இறுதி நாளான இன்று இரவு வழமைக்கு மாறான இரவாக இருக்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. நீல பூரணைதினம் தென்படுவதே இதற்கான காரணமாகும்.
டிசம்பர் 31 ஆம் திகதியான இன்று, இந்த மாதத்தின் இரண்டாவது பூரணைத்தினம்
வந்துள்ளது.

இந்த நிலையில் இதனை
வானிலையாளர்கள், நீலப்பூரணை என அழைக்கின்றனர். இன்று நள்ளிரவுக்கு
பின்னர்,புதிய வருடம் பிறந்தப்பின்னர் இந்திய மக்கள், பகுதியளவான
சந்திரக்கிரகணத்தை பார்க்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வமாக,வருடத்திற்கு 12 பூரணை தினங்கள் வருகின்றன.13 வது
பூரணைத்தினம் அபூர்வமாகவே வருகின்றது. இந்த மாதத்தின் முதலாவது
பூரணைத்தினம் கடந்த 2 ஆம் திகதி வந்தது. ஒரு பூரணைத்தினம்,இருபத்தொன்பதரை
நாளில் வரும் போது அதன் மேலதிக நாட்கள், மூன்று வருடத்திற்கு ஒருமுறை
பூரணைத்தினத்திற்கு வழி வகுக்கிறது.

நீல பூரணைத்தினம் 3 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் போது, இரண்டு நீல
பூரணைத்தினங்கள் 18 அல்லது 19 வருடங்களுக்கு ஒருமுறை நிகழ்கின்றன கடைசியாக
இந்தியாவில்,2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நீலப்பூரணைத்தினம் நிகழ்ந்தது.
இந்த நிலையில் அடுத்த புதுவருட நீலப்பூரணைத்தினம் 2028 ஆம் ஆண்டு
நிகழவுள்ளது.

No responses yet

Dec 26 2009

விரிவான செய்தி   மஹிந்தவின் மகனுக்கு ச மையற்காரராக உள்ளவர் லன்டனில் வேவு

மஹிந்தவின் மகனுக்கு சமையற்காரராக உள்ளவர் லன்டனில் வேவு

26 December, 2009 by admin


மஹிந்தவின்
மகனான யோஷித ராஜபக்ஷ பிரிட்டன் சௌத் ஹம்ப்டன் ரோயல் கடற்படை
பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவருக்கு மெய்ப்பாதுகாவலராகவும்,
சமையற்காரராகவும் பணியாற்ற இலங்கை கொமாண்டோ படைப்பிரிவின் லெப்டினண்ட்
கேணல் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அதே இடத்திலுள்ள இலங்கையர் ஒருவர்
அம்பலப்படுத்தியுள்ளார். முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட இலங்கை
கடற்படையின் விதிமுறைகளை மீறி யோஷிதவுக்கு ஸ்கொலர்ஷிப் வழங்கியுள்ளதாலேயே
அவர் அங்கு படிப்பை மேற்கொண்டு வருகிறார். எனவே இவரது படிப்பு காலத்தில்
வேண்டிய தேவைகளைக் கவனிப்பதற்காக லெப்டினண்ட் கேணல் சேர்த்து
அனுப்பப்பட்டுள்ளார். பிரிட்டனிலுள்ள ராஜபக்ஷர்கள் தவிர்ந்த நபர்களின்
தகவலை அறிவதும், அத்தகவலை ராணுவ புலனாய்வாளர்களுக்கு அனுப்புவதும்
லெப்டினண்ட் கேணலின் வேலையாக உள்ளது.

இலங்கையிலிருந்து
வெளியேற்றப்பட்டு பிரிட்டனில் தங்கியுள்ள ஊடகவியலாளர்களை நெருக்கமாகக்
கண்காணிக்கவும், அவர்களின் செயற்பாடுகளைப் பின்தொடரவும் என இலங்கை
பாதுகாப்பு அமைச்சு மற்றும் புலனாய்வு சேவை ஆகியவற்றின் பணிப்புக்கமைய
பிரிட்டனின் பல்வேறு பகுதிகளிலும் இந்த லெப்டினண்ட் கேணல் மற்றும் பல
ராணுவ புலனாய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிந்துள்ளது.

Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்:
9441

No responses yet

Dec 25 2009

வன்னிப் போரின் பின், சிறிலங்கா படையினரா ல் கைது செய்யப்பட்ட, சரணடைந்த , முன்னாள் போ ராளிகளை, இரகசிய முகாம்களில் தடுத்துவைத்திர ுக்கிறது சிறிலங்கா அரசு. இவ்வாறு தடுத்து வை த்திருக்கும் முன்னாள் போராளிகள் பலரை எதிர ்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் படு

 

 

 

சிறிலங்கா இரானுவத்தின் திட்டத்தில் மீண்டும் ஒரு இனப்படுகொலையா..?

Written by editor   
Thursday, 24 December 2009 19:34

AddThis Social Bookmark Button

வன்னிப் போரின் பின், சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட, சரணடைந்த , முன்னாள் போராளிகளை, இரகசிய முகாம்களில் தடுத்துவைத்திருக்கிறது சிறிலங்கா அரசு.  இவ்வாறு தடுத்து வைத்திருக்கும் முன்னாள் போராளிகள் பலரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினர் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளதாக  கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரினால், மனித உரிமை ஆர்வலர் ஒருவருக்குத் தெரிவிக்கபட்ட இரகசியத் தகவலாகவே  இச் செய்தி வெளிவந்துள்ளது. இராணுவத்தை அரசாங்கம் தவறாக வழிநடத்துவதாகக் கருதும்  இராணுவ அதிகாரிகள் சிலர், தங்கள் உயரதிகாரிகளுக்குத் தெரியாமல்  இரகசியமாக இத்தகைய தகவல்களை, மனித உரிமை ஆர்வலர்களுக்குத் தெரிவித்து வருகிறார்களாம். அத்தகைய ஒரு அதிகாரியினாலே இத்தகவல் வெளிவந்திருப்பதாக நம்பப்படுகிறது.

இந்தச் செய்தியை அறியும் போது, இது சாத்தியமா எனக்கேள்வி எழுந்தாலும்,  இது போன்ற  வேறு பல உத்திகள் வன்னிச் சமர்க்களத்திலும் பாவிக்கப்பட்டிருப்பதாகவே தெரியவருகிறது. மிக நுட்பமாகவும், அரசாங்கம் மீது பழி வராதவகையிலும் இப் படுகொலையினை நிகழ்த்த திட்டமிட்டிருப்பதாக அச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.

இதன்படி சிறைப்படுத்தப்பட்டுள்ள போராளிகளை  மீட்டெடுக்கும் ஒரு முயற்சி ஒன்றினை போலியாக   நடைபெற வைக்கத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்துக்கு முன்னாள்  போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம் மீது, இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் மற்றுமொரு முன்னால் போராளிகளைப் பாவிக்கவும்,  இந்த நடவடிக்கையின் போது, தம்முடன் சேர்ந்தியங்கும் போராளிகளையும், இராணுவத்தினர் போட்டுத் தள்ளத் திட்ட மிட்டிருப்பதாகவும் அத் தகவல்கள் தெரிவிப்பதாக அறியப்படுகிறது.

சிறிலங்கா அரசு, வன்னிப்போர் முடிந்து ஆறு மாதகாலத்துக்கு மேலாகிய பின்னும், தடுத்து  வைத்திருக்கும் இப் போராளிகளை எந்தவொரு மனித உரிமை அமைப்புக்களும் சந்திக்கவோ, அல்லது இவர்கள் குறித்த பெயர் விபரங்களை வெளியிடவோ  இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின்  பொது வேட்பாளராக  நிறுத்தப்பட்டுள்ள  முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தனது தேர்தற் பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில், அரச தரப்பின் மீதான பல போர்க்குற்றச்சாட்டுக்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற போராளிகளில் பலர் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது, வன்னிச் சமர்க்களத்தில் நின்றவர்கள். சரத் பொன்சேகா  தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு சாட்சிகளாக அமையக் கூடியவர்கள் என அரச தரப்பு அஞ்சுவதும்,  தடுத்துவைக்கப்பட்டிருக்கும் போராளிகளை முழுமையாக விசாரித்து அடையாளங் காணமுடியாதிருப்பதும், இதற்குக் காரணமாக இருக்கலாமெனவும் அச் செய்திகள் ஊகந் தெரிவிக்கின்றன. 

சீறிலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டிருக்கும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டால், அது மற்றுமொரு இனப்படுகொலையாகஇருக்கும் எனக் கருதப்படுகிறது.

உங்கள் கருத்துக்கள்

 

 

 

 

No responses yet

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.