Dec 26 2009

விரிவான செய்தி   மஹிந்தவின் மகனுக்கு ச மையற்காரராக உள்ளவர் லன்டனில் வேவு

Published by ச‌றோ at 11:48 am under மின்ன‌ஞ்ச‌ல்

மஹிந்தவின் மகனுக்கு சமையற்காரராக உள்ளவர் லன்டனில் வேவு

26 December, 2009 by admin


மஹிந்தவின்
மகனான யோஷித ராஜபக்ஷ பிரிட்டன் சௌத் ஹம்ப்டன் ரோயல் கடற்படை
பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவருக்கு மெய்ப்பாதுகாவலராகவும்,
சமையற்காரராகவும் பணியாற்ற இலங்கை கொமாண்டோ படைப்பிரிவின் லெப்டினண்ட்
கேணல் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அதே இடத்திலுள்ள இலங்கையர் ஒருவர்
அம்பலப்படுத்தியுள்ளார். முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட இலங்கை
கடற்படையின் விதிமுறைகளை மீறி யோஷிதவுக்கு ஸ்கொலர்ஷிப் வழங்கியுள்ளதாலேயே
அவர் அங்கு படிப்பை மேற்கொண்டு வருகிறார். எனவே இவரது படிப்பு காலத்தில்
வேண்டிய தேவைகளைக் கவனிப்பதற்காக லெப்டினண்ட் கேணல் சேர்த்து
அனுப்பப்பட்டுள்ளார். பிரிட்டனிலுள்ள ராஜபக்ஷர்கள் தவிர்ந்த நபர்களின்
தகவலை அறிவதும், அத்தகவலை ராணுவ புலனாய்வாளர்களுக்கு அனுப்புவதும்
லெப்டினண்ட் கேணலின் வேலையாக உள்ளது.

இலங்கையிலிருந்து
வெளியேற்றப்பட்டு பிரிட்டனில் தங்கியுள்ள ஊடகவியலாளர்களை நெருக்கமாகக்
கண்காணிக்கவும், அவர்களின் செயற்பாடுகளைப் பின்தொடரவும் என இலங்கை
பாதுகாப்பு அமைச்சு மற்றும் புலனாய்வு சேவை ஆகியவற்றின் பணிப்புக்கமைய
பிரிட்டனின் பல்வேறு பகுதிகளிலும் இந்த லெப்டினண்ட் கேணல் மற்றும் பல
ராணுவ புலனாய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிந்துள்ளது.

Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்:
9441

No responses yet




Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்


Video & Audio Comments are proudly powered by Riffly