Feb
05
2010
"� உடையணியாமல் காட்டுமிராண்டித்தனமாக மனிதன் வாழ்ந்த காலத்தில் ஆடையணியும்
நாகரிகத்தைக் கொண்டு வந்தவனே தமிழன்தான். இலங்கையில் தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக்கி
கண்ணைக் கட்டி கையைக் கட்டி உதைத்துத் தள்ளி சுட்டுக் கொல்கிறான் சிங்கள வெறியன்.
இதற்கு இந்தியாவும் உடந்தையாக உள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதியும் பதவியே
பெரிதென்று இதற்குத் துணை போகிறார்.
"மரக்கலன்களைச் செலுத்திக் கடல் வணிகத்தைப் பெற்றுத் தந்தவனும் தமிழன்தான்.
இத்தகைய தமிழினம் ஈழத்திலே அழிந்து கொண்டிருந்தபோது இங்கு 61/2 கோடித் தமிழர்கள்
இருந்தும் என்ன செய்தோம். �நம் தலைநகரான டெல்லிக்கே வந்து இலங்கையில் போர்
நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ராசபக்சே துணிச்சலாகக் கூறினான். ஈழத்
தமிழர்களுக்கு எதிராகக் கேடுகள் செய்து இலங்கையில் யுத்தத்தை நடத்தியதே இந்திய
அரசுதான். ஈழத்தில் நடந்த இனப் படுகொலைக்கு இந்திய அரசுதான் காரணம்�"
31.02.2010 காலை நாகையிலிருந்து அந்தணப்பேட்டை சென்று தமிழர் தன்மானப் பேரவையின்
தலைவர் தோழர் அ.கோ.கஸ்தூரிரங்கன் (ஏ.ஜி.கே) அவர்களை அவர் வீட்டில் பயணக்குழுத்
தோழர்கள் சந்தித்தனர். அங்கிருந்து புறப்பட்டு சிக்கல், ஆவரானி-புதுச்சேரி,
வடக்காலத்தூர், தேவூர் வழியாக கீழவெண்மணி சென்றடைந்தனர்.
ஒன்றுபட்டத் தஞ்சை மாவட்டத்தில் கூலி உயர்வுக் கேட்டு அதைத் தர மறுத்த
நிலப்பிரபுத்துவ வர்கத்துக்கு எதிராகத் தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் சங்கம்
கண்டு செங்கொடியேந்தி உறுதியோடு போராடினர். இதன் விளைவாக ஆதிக்க வர்க்கம் 44
உயிர்களை ஒரே குடிசையில் உயிரோடு தீயிட்டுக் கொளுத்தியது. அந்த வெண்மணித்
தியாகிகளின் நினைவிடத்தில் பயணக் குழுவினர் வீர வணக்கம் செலுத்தி உறுதி மொழி
ஏற்றனர். இந்நிகழ்வில் வெண்மணியின் மூத்த தோழர் இராமையனும் கலந்து கொண்டார். அந்தப்
புனித மண்ணிலிருந்து இப்பயணத்திற்குக் கொடையாக ஒரு பிடி நெல் கேட்டோம். வசந்தா
எனும் அம்மையார் ஒரு பிடி நெல் எடுத்து வந்தார். தோழர் தியாகு அதைத் துண்டேந்தி
பெற்றுக் கொண்டார்.
நினைவிடம் முன்பு தோழர் தியாகு சொல்ல சொல்ல பயணக்குழுவினர் ஏற்ற உறுதிமொழி
இதுதான்:
"வர்க்கச் சுரண்டலுக்கும் வர்ண சாதி ஒடுக்குமுறைக்கும் எதிராகப் போராடி உயிருடன்
எரிக்கப்பட்ட வெண்மணியின் ஈகச் சுடர்களே! நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திற்கும் வர்ண
சாதி ஒடுக்குமுறைக்கும் முற்றுப்புள்ளி வைத்திடவும் தேசிய ஒடுக்குமுறையை
எதிர்த்துப் போராடி தமிழ்த் தேசியச் சமூக நீதிப் புரட்சியை நடத்தித் தமிழ்த் தேசிய
சமூக நீதிக் குடியரசு அமைக்கும் போராட்டத்திற்கு எம்மை முழுமையாக ஒப்புக் கொடுக்க
உங்கள் பெயரால் உறுதி ஏற்கிறோம்."
கீழவெண்மணியிலிருந்து புறப்பட்டு கீழ்வேளூர், சோழிங்கநல்லூர், திருமருகல்,
வடகரை, ஆண்டிபந்தல் வழியாக பயணக்குழுவினர் நன்னிலம் சென்றடைந்தனர். வழினெடுகிளும்
அறுவடையில் ஈடுப்பட்டிருந்த உழவர்களும், உழவுத் தொழிலாளர்களும் தமிழ் மீட்பு
நிதியத்திற்கு நெல் கொடுத்தனர். இன்று 03.02.2010 பயணத்தின் பத்தாம் நாள். இன்னும்
முப்பத்தேழு நாட்கள் மீதம் உள்ளன. இன்னும் 800 கிலோமீட்டருக்கு மேல் நடக்க
வேண்டியிருக்கும். 12.03.2010இல் குடந்தையில் பயணம் நிறைவடைவதற்கு முன் நூற்றுக்
கணக்கான ஊர்களுக்குச் சென்று இலட்சக் கணக்கான மக்களைச் சந்திக்க உள்ளது தமிழ்
மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப்பயணம்.
பயணத்தின் வெற்றிக்கும் தமிழ் மீட்பு நிதியத்தின் வளர்ச்சிக்கும் ஒல்லும்
வகையெல்லாம் உதவிட உலகத் தமிழர்கள் அனைவரையும் உரிமையுடன் வேண்டுகிறோம்.
|
கருத்து ஒன்றை விடவும்