Feb 05 2010
விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் விடு த்துள்ள அறிக்கை
http://www.lttepress.com/more3.html
01.01.2010
விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கை.
எமது மாவீரர்களின் தியாகங்களையும் எமது மக்களின்
சுயநிர்ணய உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தையும் மறுதலித்து எமது மக்களின்
மனங்களை புரிந்து கொள்ளாததும் கடந்த காலங்களில் நாம் எடுத்த முடிவுகள்தான்
இன்று எமது மக்களின் அவலத்திற்கு காரணம் எனவும் தமிழ் அரசியல் தலைவர்கள்
பேசுவது வேதனைக்குரியது ஒன்றாகும்.
ஏனெனில் கடந்த காலங்களில் எமது மக்களின் உரிமைகளுக்காக நாம் பல ஜனநாயக
முன்னெடுப்புகளை செய்தபோதும் சிங்கள பேரினவாத அரசு எம்மையும் எமது
மக்களையும் சர்வதேச மனித நேய அமைப்புகளையும் ஏமாற்றி வந்தது, இதை எமது
மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது வன்னி சமர்க்களத்தில் சிங்களஅரசு மட்டும் எம்முடன்
போரிடவில்லை. இரண்டு வல்லரசுகள் இணைந்த ஐந்து நாடுகள் தரை, கடல், வான் வழி
என மும்முனையில் கொடுஞ்சமரில் ஈடுபட்டன. தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை
சிங்கள அரசு எம்மீதும் மக்கள் மீதும் ஏவி பொருளாதர தடைகளை விதித்து பெரும்
இன அழிப்பில் ஈடுபட்டது.
எம்மையும் எம் விடுதலைப்போராட்டத்தையும் முழுவதும் துடைத்தெறிகின்ற
நோக்கிலேயே சிங்கள அரசுடன் வல்லாதிக்க சக்திகள் இணைந்து இன அழிப்பு போரை
நடாத்தின. இதனால் உலகிற்கு தெரியாத கொடும் படுகொலைகளும் அவலங்களும்
நடந்தேறியது.
இவ்வாறு கடந்த கால ஜதார்த்த நிலைகளை புரியாது விமர்சனங்களை முன்வைத்து
எமது தாயக விடுதலைப்போரையும் தியாகங்களையும் கொச்சைப்படுத்தி விலை பேசும்
தமிழ் அரசியல்வாதிகளை எமது மக்கள் இனம்கண்டு புரிந்து வைத்துள்ளனர்.
சிங்கள பேரினவாதம் எமது மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி
அதிகாரத்திற்கு வருவதற்கு வழிகோலும் வகையில் தமிழ் அரசியல் கட்சிகள்
செயற்படுவது அநீதியான செயலாகும்.
எமது மக்களின் சோகங்களையும், இழப்புகளையும், இழந்த உரிமைகளையும்
கருத்திற்கொள்ளாது பேரினவாத சக்திகளுக்கு துணைபோகும் அரசியல் கட்சிகளுக்கு
எமது மக்கள் தெளிவானதும் முடிவானதுமான தீர்ப்பினை வழங்குவார்கள்.
ஏனெனில் எமது மக்கள் காலத்தால் ஏற்பட்ட பெருந்துயர்களை மனதில் ஆழமாகப்
பதித்து வைத்தள்ளார்கள். நிதானித்து செயற்படக்கூடிய மாபெரும் சக்தியாக
மக்கள் உருவெடுத்துள்ளார்கள்.
எனவே எமது மக்கள் தீர்மானிக்கக்கூடிய தமது ஆற்றலை பேரினவாத சக்திகளுக்கு
வெளிப்படுத்தி தமது உரிமைகளை நிலைநாட்டுவதுடன் பேரினவாத சக்திகளுக்குள்
சோரம் போயுள்ள தமிழின அரசியல் தலைவர்களை இனம்காட்டுவதுடன் சிங்கள
அடக்குமுறையாளாகளால் ஏற்பட்ட கடந்த கால சோகங்களுக்கும் பதில்
கொடுப்பார்கள் என்பது நிச்சயம்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
தமிழீழ விடுதலைப்புலிகள்
தலைமைச் செயலகம்,
தமி
Related posts:
- இலங்கைத் தமிழர்களின் துயரங்களுக்கு விடு தலை மட்டுமே இறுதியான முடிவாக இருக்க முடியும ் என்று உலகத்தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=6544#6544 லண்டன் : இலங்கைத் தமிழர்களின் துயரங்களுக்கு விடுதலை மட்டுமே இறுதியான முடிவாக...
- Pillai Raja Koopura foundation stone Dear all Pillaiyaar Raja Koopura foundation stone laid...
- தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் உடல் என்று காட்டியது, கொல்லப்பட்ட சிங்கள இராணுவத ்தை சேர்ந்த ஒருவருடையதா????… http://www.tamilwin.com/view.php?2a36QVj4b4cF98224beSIPz0e22p1GQdcd2GipD3e0dpZLuQce04g2F92cdbHjoQ30 தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் உடல் என்று காட்டியது, கொல்லப்பட்ட சிங்கள இராணுவத்தை...
- UDAGATH THURAI THAMIL VIDUTHALAIP PULIGAL ஈகப்பேரொளி முத்துக்குமார் நினைவு தினம்தமிழின விடிவிற்காகவும் எம் மண் காக்கவும் பேரினவாத...
- நாம் ஒன்றிணையும் போது எம்மை எதிர்ப்பதற் கு இந்த உலகம் துணியப்போவதில்லை http://www.eelamsoon.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE.html நாம் ஒன்றிணையும் போது எம்மை எதிர்ப்பதற்கு இந்த உலகம் துணியப்போவதில்லை வட்டுக்கோட்டைத்...
