Feb 16 2010

Published by at 8:58 pm under மின்ன‌ஞ்ச‌ல்

 

http://www.puthinappalakai.com/view.php?20100215100508

கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான விளக்க பொதுக்கூட்டம்
[ திங்கட்கிழமை, 15 பெப்ரவரி 2010, 20:42 GMT ] [ வி.அஸ்திரன் ]

'கனடியத்
தமிழர் இணையம்' நாடு கடந்த தமிழீழ அரசின் உருவாக்கத்தை ஆதரித்து 14-2-2010
அன்று நடாத்திய பொதுக் கூட்டம் பெருமளவிலான பொது மக்களின் பங்களிப்புடன்,
ஸ்காபரோ கெனடி வீதியிலுள்ள எவரெஸ்ற் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது நாடு கடந்த தமிழீழ அரசின் கனடிய செயற்பாட்டுக் குழு
சார்பில் அதன் இடைக்காலத் தலைவர் கலாநிதி ராம் சிவலிங்கம் மற்றும் ரதி
பரமசாமி ஆகியோர் பேச்சாளர்களாகக் கலந்து கொண்டனர்.

 
பொது மக்கள்

இவர்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசிற்கான சர்வதேச
இணைப்பாளர் சட்டத்தரணி விஸ்வநாதன் உருத்திரகுமாரன் மற்றும் நாடு கடந்த
தமிழீழ அரசிற்கான அமெரிக்க செயற்பாட்டுக்குழு உறுப்பினர் கலாநிதி ஜெராட்
பிரான்சிஸ் ஆகியோர் நேரடிக் காணொலித் தொடர்பு மூலமும் உரையாற்றினர்.

அத்தோடு கனடியத் தமிழர் இணையத்தின் உறுப்பினர்களும் நாடு கடந்த தமிழீழ
அரசினை ஆதரித்து உரைகளை நிகழ்த்தினர். கனடியத் தமிழ் இணையத்தைச் சேர்ந்த
திரு குணா  தனது உரையின் இறுதியில் நாடு கடந்த தமிழீழ அரசிற்கு ஆதரவான
உறுதி மொழி ஒன்றினை வாசித்தார்.


பொது மக்கள்

நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில் நேரடித் தொலை தொடர்புப் பரிவர்த்தனை
மூலம் முதலாவதாகப் பேசிய வைத்திய கலாநிதி பிரான்சிஸ் அவர்கள் கனடா வாழ்
தமிழீழ மக்கள் எல்லோரும் நாடு கடந்த தமிழீழ அரசின் உருவாக்கத்திற்கான
செயற்பாட்டில் பங்கு கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

திரு உருத்திரகுமாரன் பேசும் போது சிங்கள அரசானது நாடு கடந்த தமிழீழ
அரசு உருவாவதைத் தடுக்கக் கங்கணம் கட்டி நிற்பதாகக் கூறியதுடன் அதற்குச்
சான்றாகக் கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி அன்று  நாடு கடந்த தமிழீழ அரசின்
உருவாக்கத்தைத் தமது புலனாய்வுத் துறை மூலமோ அல்லது வெளிநாடுகளில்
இருக்கும் தமது புலனாய்வுத்துறை மூலமோ உடைப்போம் என்று ஸ்ரீலங்காவின்
வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம கூறியிருந்ததையும்
நினைவுபடுத்தினார்.

 
நாடு கடந்த தமிழீழ அரசு சார்பாக உரை நிகழ்த்தும் ரதி பரமசாமி

அவர் தொடர்ந்து பேசுகையில் நாடு கடந்த தமிழீழ அரசு, மக்களின் அரசு
என்றும் அதை உருவாக்குபவர்கள் மக்களே அன்றி ஒரு தனிப்பட்ட உருத்திரகுமாரனோ
அல்லது ராம் சிவலிங்கமோ அல்லது ஒரு தனிப்பட்ட அமைப்போ அல்ல என்பதை வெகு
அழுத்தந்திருத்தமாகக் கூறினார்.

அவர் மேலும் பேசுகையில் நாடு கடந்த தமிழீழ அரசிற்கான முதலாவது தேர்தல்
சிறிலங்காவிற்குத் தமிழினம் கொடுக்கும் ஒரு குறயீட்டுப் பதிலடியாக 
எதிர்வரும் ஏப்ரல் மாதம் சிறிலங்காவின் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும்
அதே தினத்தில் நடைபெற்று எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி 
முள்ளிவாய்க்கால் மௌனத்தின் முதலாவது ஆண்டு பூர்த்தியாகும் போது நாடு
கடந்த தமிழீழ அரசின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நடைபெறவேண்டும் என்றும்
கூறினார்.

 
நாடு கடந்த தமிழீழ அரசு சார்பாக உரை நிகழ்த்தும் திரு அன்ரன் சின்னராசா

கனடியத் தமிழ் இணையத்தினரின் குறுகிய வரலாற்றில் அவர்கள்
ஏற்பாடு செய்த முதலாவது நிகழ்வாக இந்நிகழ்வு இருந்த போதும் மிகவும்
நேர்த்தியாக நிகழ்வு அமைந்திருந்தது.

நிகழ்ச்சியின் இறுதியில் பொது மக்களின் ஐயங்களைத் தீர்க்குமுகமாக திரு
உருத்திரகுமாரன் அவர்களும் கலாநிதி ராம் சிவலிங்கம் அவர்களும் அவர்களது
வினாக்களுக்குப் பதிலளித்த்துடன், அங்கு வந்திருந்த சிலரால் கேட்கப்பட்ட
குதர்க்கமான கேள்விகளுக்கும் அசாதாரண பொறுமையுடன் பதிலளித்தமை
நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டியது என்றே கூறவேண்டும்.


கனடிய செயற்பாட்டுக்குழுவின் இடைக் காலத் தலைவர் கலாநிதி
ராம் சிவலிங்கம்

 கனடியத் தமிழ் இணையத்தினரால் வெகு சிறப்பாக ஒழுங்கு
செய்யப்பட்ட இந்நிகழ்வானது காணொலிப் பரிவர்த்தனை மூலம் சர்வதேசமெங்கும்
நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
 
இணையத் தொழினுட்பம் வாயிலாக
ஒளிபரப்புச் செய்யப்பட்ட இந்நிகழ்வினை ஏறத்தாழ மூவாயிரம் பேர் வரையில்
தத்தமது இல்லங்களில் இருந்தவாறே கணனி மூலம் பார்த்தனர்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்க

No responses yet
Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.