கொழும்பின் தமிழர்கள் செறிந்து வாழ்ந்துவரும் வெள்ளவத்தை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களில் தற்போது காணி மற்றும் சொத்துக்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது இந்தப்பிரதேசங்களில் வடக்கு கிழக்கை சேர்ந்தவர்கள் யுத்தம் காரணமாக பெருமளவில் வந்து தங்கியிருந்தனர் இதன்காரணமாக சொத்துக்களின் விலைகளிலும் ஏற்றம் காணப்பட்டன. எனினும் தற்போது யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் குறித்த பிரதேசங்களில் குடியேறியிருந்த மக்கள் வடக்கு கிழக்கில் மீண்டும் குடியேற செல்வதை அடுத்தே சொத்துக்களின் விலைகளில் குறைவு ஏற்பட்டு வருவதாக தரகர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு கிழக்க மக்களின் அதிகரிப்பை அடுத்து வெள்ளவத்தையிலும் கொட்டாஞ்சேனையிலும் உயர்மாடி குடியிருப்பு கட்டிடங்கள் பல அமைக்கப்பட்டு வந்தன இந்நிலையில் வெள்ளவத்தையில் ஒருபேர்ச் காணியின் விலை 30லட்சம் ரூபாவுக்கும் கொட்டாஞ்சேனையில் ஒருபேர்ச் காணி 20லட்சம் ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டன எனினும் தற்போதைய நிலையில் அவற்றில் 75 வீதவிலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மேலும் சுட்டிக் காட்டப்படுகிறது.