நேற்று
நள்ளிரவில் நடைபெற்ற இந்த செயல் காரணமாக அதிர்ச்சிக்குள்ளான ஜாக்குவார்
இன்று மாலை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
முதல்வர்
கலைஞருக்கு திரையுலகம் எடுத்த பாராட்டு விழாவில் பேசிய அஜீத்,
மிரட்றாங்கய்யா…. என்று திரையுலகை சார்ந்த சிலர் மீது முதல்வரிடம்
புகார் கூறியிருந்தார். இதை தொடர்ந்து நக்கீரன் இதழுக்கு பேட்டியளித்த
ஜாக்குவார் அஜீத் பற்றி சற்று காட்டமாகவே தனது அதிருப்தியை
தெரிவித்திருந்தார். அதில்,
"நேத்து வந்த அஜீத் பங்களா கட்டலாம். அஞ்சு கோடி ரூபா கார்ல வலம்
வரலாம். 60 வருஷமா உழைச்சு உழைச்சு நொந்து போயிருக்கும் தொழிலாளர்களுக்கு
அரசாங்கம் மூலமா வீடு கிடைச்சிடக் கூடாது.
இப்படிப்பட்ட ஹீரோக்கள்ட்ட தொழிலாளர்கள் சுயமரியாதை இல்லாம மண்டய
சொறிஞ்சுக்கிட்டு நிக்கணும் என்கிற ஆணவம் அஜீத்துக்கு. அதனாலதான் நன்றி
தெரிவிக்கிற ஒரு விழாவுல… இப்படி நாகரீகம் இல்லாம பேசியிருக்கார். தமிழ்
மண்ணுல இருக்க… தமிழ் மக்கள் பணத்துல வாழ்ற…. தமிழ்நாட்டு சோற
சாப்பிடுற… ஆனா தமிழக மக்களோட முக்கிய பிரச்சினையான காவிரி
பிரச்சினைக்கு போராட வரமாட்ட. ஈழத் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமையை
உணர்வு பூர்வமா கண்டிக்க நடந்த கூட்டத்துக்கு வரமாட்டேன்னு சொன்னீங்க.
'உலகத் தமிழர்கள் "ஏகன்' படத்தை வெளியிடவிடமாட்டோம்னு கொந்தளிக்கவும்,
அந்த கூட்டத்துக்கு உன் தொழில் பாதுகாப்பாக இருக்கணும்னு ஓடி வந்த. உன்
சுயநலத்துக்காக நீயா வந்திட்டு… மிரட்டி கூப்பிட்டாங்கன்னு சொன்னா என்ன
அர்த்தம்?
ஒரு ஹீரோன்னா மக்களுக்கு நல்லதை சொல்றவனா இருக்கணும். எம்.ஜி.ஆர்.
சிகரெட் குடிச்சா நடிச்சார்? சிகரெட் குடிச்சு நடிச்சா அதை இளைஞர்கள்
பின்பற்றுவாங்களேனு உன் சொந்த புத்திக்கு எட்டல.
அடுத்தவங்க அதச் சொன்னா… நாங்க அரசியலுக்கு வருவங்கிற. வாழ வைக்கிற
மக்கள் மேல அக்கறை இல்லாத உன்னோட போலி ஹீரோ வேஷம்…. ஒரிஜினல் முகம்
தெரிஞ்சு போச்சு. உனக்காக… நீ கைதட்டல் வாங்குறதுக்காக டூப் போட்டு
அடிபட்டு, அவஸ்தைப்படுற தொழிலாளிகள் கொதிச்சுப் போய் இருக்காங்க.
தொழிலாளிகள் முன்னாடி நீ பொது மன்னிப்பு கேட்கணும். இல்லேன்னா போராட்டம்
நடத்துவோம். அய்யா அஜீத்து…. உன்ன அல்டி மேட் ஸ்டார் ஆக்கினதுக்கா ஆப்பு
வைக்கப்பாக்குற" என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த பேட்டி வெளியான நாளில் இருந்தே அவருக்கு அஜீத் ரசிகர்களிடமிருந்து
தொலைபேசியில் மிரட்டல் வந்ததாக தெரிவித்த ஜாக்குவார், நேற்று வேறொரு
படப்பிடிப்புக்காக மதுரை போயிருந்தாராம். அவர் ஊரில் இல்லாத நேரத்தில்
எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அவரது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த அவரது காரை
அடித்து உதைத்து சேதப்படுத்தியிருக்கிறார்கள் சிலர். இதற்கு காரணம் அஜீத்
ரசிகர்கள்தான் என்று கூறுகிறார் ஜாக்குவார் தங்கம்.
சற்றே அடங்கியிருந்த அஜீத் பேச்சு விவகாரம், இந்த சம்பவத்தால் மீண்டும் புழுதி கிளப்பும் போலிருக்கிறது.
|
அஜித் ; காவிரி, ஈழம் இப்படிபட்ட பிரச்சனைகளில் என்னை வழுகட்டாயமாக கூப்பிட்டார்கள், அப்ப உனக்கு உணர்வு புர்வமா விருப்பம் இல்ல அதனால்தான் உன்னை வழுகட்டாயமாக கூப்பிட்டுயிருக்கிறார்கள். ஆக மக்கள் உன் படத்தை மட்டும் பார்க்க மட்டும் வேணும் ஆனா அவுங்களுக்கு ஒரு பிரச்சனைனா நீ வர மாட்ட அப்ப படத்த நீயும் உன் குடும்புமும் மட்டும் பாருங்க தே.வ்..டியா மோவன!!
ஒலிக் கருத்தைக் கேள்