Feb
19
2010
http://www.z9tech.com/view.php?2bbmAAQQ0ee0ddXRlmm400eccfBBZZB44b44XP966eccd23ee0FF4ddc23BBnddcaa43044OXXdee22e00Mmmb00
|
|
|
ஏனைய தொழிநுட்ப செய்தி |
கடன் அட்டை பின்(Pin) சிஸ்டம் மோசடி…. |
[ வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2010, 06:59.29 பி.ப GMT ] |
நாம்
இப்போது வாங்கும் அனைத்து பொருள்களுக்கும் கடன் அட்டையை பயன்படுத்தி காசு
கொடுக்கும் வசதி சிறு தெருக்களில் கூட வந்துவிட்டது இதற்காக அவர்கள் ஒரு
பின் சிஸ்டம் உள்ள இயந்திரம் வாங்கி வைத்து நம் ஏடிஎம் அட்டையில்
உள்ளதகவல்களை பயன்படுத்தி காசு எடுக்கின்றனர்.
ஆனால் ஒரு சில ஹக்கர்கள்
நாம் பயன்படுத்தும் இந்த பின் சிஸ்டத்தின் தகவல்களை உலோகத்தில் ஏற்படும்
பிழை மூலம் பின் சிஸ்டத்தின் தகவல்களை மாற்றியமைக்கப்பட்ட அட்டை மூலம்
எளிதாக எடுத்து விடுகின்றனர் இதைப்பற்றி ஆராய்ந்து பார்த்ததில் சரியாக சில
மொடல் பின் சிஸ்டம் உள்ள இயந்திரத்தில் இவர்கள் தாங்கள் பயன்படுத்தும்
அட்டையுடன் வயர் இணைத்து கையடக்க ஹக்கிங் இயந்திரத்தில் சேர்த்துள்ளனர்.
இது எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தால் நாம் பயன்படுத்தும்
அனைத்து வகை பின் சிஸ்டத்துக்கும் துணை செய்கிற மாதிரி இவர்கள் ஒரு
எக்ஸ்ட்ரனல் சிறிய வகை கருவி ஒன்றை தயார் செய்து விடுகின்றனர்.
அடுத்தும் எந்த பின் சிஸ்டம்-ஐ கொள்ளை அடிக்க வேண்டுமோ அந்த பின்
சிஸ்டத்துக்கு சென்று அங்கு இவர்கள் தயார் செய்து வைத்திருக்கும் ஏடிஎம்
அட்டையுடன் (ஹக்கிங் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்) இதை அந்த பின்
சிஸ்டத்துன் இணைத்தவுடன் ஆத்தண்டிங்கேசன் கேட்கும் இவர்கள் ஏடிஎம் சங்கேத
கோடு கொடுப்பது போல் ஆம் என்று உறுதிபடுத்திவிடுகின்றனர்.
இதன் பின் என்ன நடக்கிறது என்றால் இதுவரை அந்த பின் சிஸ்டத்தில்
யாரெல்லாம் ஏடிஎம் அட்டை பயன்படுத்தினார்களோ அவர்கள் அத்தனைபேரின் கணக்கு
எண்ணும் சங்கேத வார்த்தையும் சிலநொடியில் அவர்கள் எடுத்து வந்திருக்கும்
ஹக்கிங் இயந்திரத்தில் பதிவாகிவிடும்.
அடுத்த சில மணி நேரத்திற்குள் அத்தனை பேரின் வங்கிகணக்கில் உள்ள
பணத்தையும் எளிதாக கொள்ளை அடித்து விடுகின்றனர் இப்படி திருட்டு போனதும்
உடனடியாக நமக்கு தெரிவது நாம் கடைசியாக ஏடிஎம் பயன்படுத்திய அந்த கடைதான்
அதனால் இனி “பின் சிஸ்டம்” வைத்துள்ள கடைக்காரர்கள் மற்றும் டிக்கெட்
பதிவு செய்யும் இடத்தில் பின் சிஸ்டம் இயந்திரம் வைத்துள்ளவர்கள் தாங்கள்
இனி அதிக அளவு சோதனையுடன் விழிப்பாக இருந்தால் தான் இது போன்ற குற்றங்களை
தடுக்க முடியும்.
அதுமட்டுமின்றி இவ்வாறு உங்கள் இயந்திரம் நிறுவனத்தை தொடர்பு கொண்டு
கேட்டால் இதற்கு புதிதாக அவர்கள் செயல்படுத்தியிருக்கும் கருவியை வாங்கி
வைத்தால் கூட பிரச்சினைகளை பெரும்ளவு தவிர்க்கலாம் என்பது நம் எண்ணம்.
|
|
கருத்து ஒன்றை விடவும்