Feb 21 2010

ஏனைய தொழிநுட்ப செய்தி உலகில் முதல் முறைய ாக 3-டி நேரடி ஒளிபரப்பு

Published by at 9:18 pm under மின்ன‌ஞ்ச‌ல்

 
 

ஏனைய தொழிநுட்ப செய்தி
உலகில் முதல் முறையாக 3-டி நேரடி ஒளிபரப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 21 பெப்ரவரி 2010, 06:07.32 பி.ப GMT ]
சம்பவங்களை
உயிருள்ள வகையில் காட்டுவதால் திரைக்காட்சிகளுக்கு எப்போதும் ஒரு தாக்கம்
உண்டு. அதில் 3-டி எனப்படும் முப்பரிமாணத்தில் காட்சிகளை பார்த்தால்
பிரமிக்க வைக்கும்.

சமீபத்திய `அவதார்’ சினிமா படம் வசூலில் சக்கைபோடு போடுவதற்கு முக்கிய காரணம் 3-டி காட்சிகள்தான்.

குழந்தைகள், பெரியவர் என பாகுபாடு இல்லாமல் அனைவரையும் கவரும்
3-டி காட்சியில், ஒரு விளையாட்டுப் போட்டியை நேரடியாக ரசித்தால் எப்படி
இருக்கும். பிரமிக்க வைக்கும்தானே! ஆம், அந்த அதிசயம் நடத்திக்
காட்டப்பட்டுவிட்டது.

இங்கிலாந்தில் இந்த வெற்றிகரமான முயற்சி நடந்தது. அங்கு
சமீபத்தில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. ஜனவரி 31-ந்தேதி
ஆர்சனால் – மான்சென்ஸ்டர் அணிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டி
நடந்தது. பால்கெல்லி என்ற இடத்தில் உள்ள ரெயில்வே பொதுவிடுதி மைதானத்தில்
இந்த விளையாட்டு நடந்தது. போட்டியை 3-டி காட்சிகளாக ஒளிபரப்ப ஸ்கை
ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

போட்டி தொடங்கியதில் இருந்தே ரசிகர்கள் ஆரவாரம் அளவுக்கு அதிகமாக
இருந்தது. வீரர்கள் பந்தை உதைப்பதும், லாவகமாக கடத்திச் செல்வதும் 3-டி
காட்சிகளில் தத் பமாக அமைந்திருந்தது ரசிகர்களை உற்சாகத்தில் துள்ள
வைத்தது.

அனேக ரசிகர்கள் விளையாட்டை நேரடியாக ரசிப்பதைவிட திரையில் 3-டி
காட்சியாக ரசிப்பதே மிகவும் சுவாரசியமாக இருந்ததாக தெரிவித்தனர். டேவிட்
என்ற 71 வயது ரசிகர் கூறும்போது, `நான் 60 ஆண்டு களாக போட்டிகளை ரசித்து
வருகிறேன். ஆனால் இந்தப் போட்டியே சிறப்பாக இருந்தது. 3-டி காட்சிகள்
ஒவ்வொரு `ஷாட்’களையும் அருகில் இருந்து பார்ப்பதுபோல் வியக்கும் வகையில்
காட்டி எங்களை மயக்கி ஈர்த்துவிட்டது’ என்றார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட விளையாட்டு அதிகாரிகள்
பல்வேறு விளையாட்டுகளையும் 3-டி வடிவில் ஒளிபரப்பும் நடவடிக்கையில் இறங்கி
உள்ளன

No responses yet




Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.