Feb 23 2010

புலிகளின் பெயரில் குண்டுத் தாக்குதல்கள ை நடத்த அரசு

Published by ச‌றோ at 7:36 pm under மின்ன‌ஞ்ச‌ல்

                    
https://mail.google.com/mail/?nsr=1&shva=1#compose

புலிகளின் பெயரில் குண்டுத் தாக்குதல்களை நடத்த அரசு திட்டம்?

Addthis

ratnasiri.jpg - 18.28 Kbவிடுதலைப்
புலிகளின் பெயரைப் பாவித்து கொழும்பு நகரில் குண்டுத் தாக்குதல்களை நடத்த
அரசாங்கம் திட்டமிட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப் பட்டிருக்கிறது.

கொழும்பிலுள்ள
ஆங்கில ஊடகமொன்றிற்கு பேட்டியளித்துள்ள பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா
புலிகளின் தற்கொலைத் தாக்குதலாளிகள் கொழும்பிற்குள் ஊடுருவியிருப்பதாக
புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும் எனினும் அவர்கள்
தற்போது தங்கியிருக்கும் இடம் குறித்த விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை
எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

அவர்கள் எந்த நேரத்தில் தாக்குதல்
நடத்துவார்கள் என்பதை ஊகிக்க முடியாது என்றும் எனவே அனைவரும்
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் ரத்னசிறி விக்கிரமநாயக்கா
தெரிவித்துள்ளார்.

ரத்னசிறியின் இந்தக் கருத்து தமது அரசியல்
எதிரிகளை புலிகளின் பெயரில் கொலை செய்வதற்கு செய்யப்படும் முன்னேற்பாடாக
இருக்கலாம் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றன

No responses yet




Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்