Feb 24 2010
ராஜபக்ச வெற்றியை எதிர்த்து பொன்சேகா மனு தாக்கல்
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ச வெற்றி பெற்றதை எதிர்த்து சரத் பொன்சேகா அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த
ஜனவரி 26 ஆம் தேதியன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில், ராஜபக்சவை எதிர்த்து
எதிர்கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக பொன்சேகா போட்டியிட்டு
தோல்வியடைந்தார்.
ஆனால் வாக்குப் பதிவில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றதாக பொன்சேகா குற்றம் சாற்றியிருந்தார்.
இந்நிலையில்
அதிபர் தேர்தலில் ராஜபக்ச வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும்
என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொன்சேகா இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில்,
தேர்தலில் ராஜபக்ச பெற்ற வெற்றி மோசடியானது என்றும், அரசு செல்வாக்கை
பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு ராஜபக்ச வெற்றி
பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
தேர்தல் ஆணையர் தயானந்த திஸ்ஸநாயக மற்றும் 20 அதிகாரிகள் பதிவான வாக்குகளை
ராஜபக்சவுக்கு ஆதரவாக மாற்றியதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.