Feb 25 2010
க ோபத்தில் இலங்கை அர
http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=6260#6260
பிரிட்டனில் உலகத் தமிழர் பேரவை மாநாடு : கோபத்தில் இலங்கை அரசு
கொழும்பு : லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை மாநாடு குறித்து இலங்கை அரசு கோபம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
உலகத் தமிழர் பேரவை மாநாடு இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று
நடைபெற்றது. அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மில்லிபேண்ட்
மாநாட்டை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் இங்கிலாந்து எதிர்க்கட்சித்
தலைவர் உட்பட பல்வேறு எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். இது இலங்கை அரசைக்
கோபமடையச் செய்துள்ளதாக அதிர்வு இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தடை
செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக உலகத் தமிழர் பேரவை
செயல்படுவதாகவும், இதற்கு இங்கிலாந்து அரசு எவ்வாறு அனுமதி அளித்தது
என்றும் இலங்கைக்கான இங்கிலாந்து நாட்டின் தூதரை இலங்கை அரசு கேட்டுள்ளதாக
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது