Feb 27 2010
கட்டுநாயக்கா விமான நிலையத்தின் ஊடாக இலங் கைக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்கள் தொ டர்பாக தகவல்களை திரட்டுவதற்காக
http://www.athirady.info/archives/62391கட்டுநாயக்கா விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்கள் தொடர்பாக தகவல்களை திரட்டுவதற்காக
இராணுவ மற்றும் காவல்துணை இணைந்து விஷேட புலனாய்வுப்பிரிவொன்றை
ஏற்படுத்தியுள்ளன அமெரிக்காவின் சி.ஐ.ஏ.புலனாய்வுப் பிரிவினர் சிலர்
எதிர்வரும் பொதுத்தேர்தல் செயற்பாடுகளை ஆராய்வதற்காக இலங்கைக்கு வரத்
தயாராகி வருவதாக இந்தியா மற்றும் தாய்லாந்து புலனாய்வுப்பிரிவினரிடம்
இருந்து கிடைத்த தகவல்களுக்கமைய இந்த புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களில் சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்பான
தகவல்களை சேகரிப்பதற்காகவே இந்தப்பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது இதேவேளை
கொழும்பைச் சூழவுள்ள விடுதிகளில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் சிலரை
கடந்த சில தினங்களில் மேற்கூறிய புலனாய்வுப் பிரிவினர் விசாரணை
நடத்தியிருப்பதாகவும் தெரியவருகிறது விடுதலைப்புலிகளின் அச்சுத்தல்
காலத்தில்கூட இவ்வாறானதொரு புலனாய்வு வலயமைப்பு செயற்படுத்தப்படவில்லையென
அரச புலனாய்வுப் பிரிவின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.