Feb 27 2010
யுத்தத்தின்போது அவயங்களை இழந்து ஊனமுற்ற இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு பலவந்தமாக முன்னாள் இராணுவு தளபதி
http://www.athirady.info/archives/62391
யுத்தத்தின்போது அவயங்களை இழந்து ஊனமுற்ற இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு பலவந்தமாக முன்னாள் இராணுவு தளபதி சரத்பொன்சேகாவிற்கு
எதிராக சாட்சி கூறுமாறு நிர்ப்பந்திக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது
தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிரான பல்வேறு
குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளன எனினும் அவற்றை
உத்தியோகபூர்வமாக நிரூபிக்க ஆவணங்கள் எவையும் இல்லை என இராணுவத் தகவல்கள்
தெரிவிக்கின்றன ஏற்கனவே அவருக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாக
இராணுவத்தினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் பொன்சேகாவிற்கு எதிரான
குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தும் வகையில் அவயங்களை இழந்த இராணுவ
வீரர்கள் அரசாங்கத்தினால் கடத்தப்பட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளையும்
ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது இவ்வாறு
கடத்தப்பட்டு விடுவிக்ப்பட்ட இராணுவ வீரர் ஒருவர் அரசாங்கத்திற்கு எதிரான
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார் அவர்
இந்த செவ்வியில் ஹிந்தி படங்களில் நடப்பது போலவே தற்போது இலங்கை
அரசாங்கத்தின் மூர்க்கத்தனமான செயற்பாடுகளும் அமைந்துள்ளதாக
குறிப்பிட்டுள்ளார் கொழும்பு நகரில் புகழுடன் ஒருவரும் வாழமுடியாத
சூழ்நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். கடத்திச்செல்லப்படுவதும்
துன்புறுத்தப்படுவதும் இலங்கையில் சர்வசாதாரணமாக இடம்பெற்றுவருவதாகவும்
சட்டஒழுங்குகள் அரசாங்கத்தினாலேயே மீறப்பட்டு வருவதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.