Mar
11
2010
http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=6544#6544
லண்டன் : இலங்கைத் தமிழர்களின் துயரங்களுக்கு விடுதலை மட்டுமே இறுதியான முடிவாக இருக்க முடியும் என்று உலகத்தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
உலகத்தமிழர் பேரவை தலைவர் இமானுவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
போரின்போது சரணடைந்த தமிழ் இளைஞர்கள் மீது முறையான விசாரணை நடைபெறவில்லை
என்றும், செஞ்சிலுவை சங்கத்திற்குக்கூட அவர்களைப் பற்றிய தகவலை இலங்கை
அரசு தெரிவிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். தமிழர் பகுதிகளில்
மறுசீரமைப்பு செய்யப்படும் என்று வாக்களித்த இலங்கை அரசு, தற்போது அந்தப்
பகுதிகளில் சிங்கள பௌத்தர்களைக் குடியமர்த்தி வருவதாகவும் அவர்
தெரிவித்துள்ளார். கடந்த அதிபர் தேர்தலைப் போலவே, நாடாளுமன்றத்
தேர்தலிலும் தமிழர்கள் ஆர்வமற்று இருப்பதாகக் கூறியுள்ள இமானுவேல்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவுகள் தோன்றியிருப்பது கவலையளிப்பதாகத்
தெரிவித்துள்ளார். சொந்த மண்ணில் உள்ள ஆதரவற்ற சிறுவர்களுக்கும், கைம்
பெண்களுக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள், அரசு சாரா தொண்டு அமைப்புகள்
மூலம் நிதியுதவி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத்
தமிழர்களின் துயரங்களுக்கு விடுதலை மட்டுமே முடிவாக இருக்க முடியும்
என்றும், இதனை வலியுறுத்தாத தமிழ் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்கக்
கூடாது என்றும் அந்த அறிக்கையில் இமானுவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.
|
கருத்து ஒன்றை விடவும்