Mar 18 2010

மண்டேலா பாணியில் ரணில் தேடும் புதிய இலங் கைத் தீவு

Published by ச‌றோ at 9:19 am under மின்ன‌ஞ்ச‌ல்

-

 http://www.uthayan.com/Welcome/afull.php?id=333&L=T&1268921665

Latest News

» மண்டேலா பாணியில் ரணில் தேடும் புதிய இலங்கைத் தீவு

கொழும்பில்
தமது ஐக்கிய தேசியக் முன்னணியின் தேர் தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு
உரையாற்றிய எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அச்சமயம் நாட்
டுக்குப் புதிய அழைப்பு ஒன்றையும் விடுத்திருக்கின்றார்.
வெள்ளையரின்
ஆதிக்கப் பிடியிலிருந்து தென்னா பிரிக்கா விடுவிக்கப்பட்டபோது, புதிய
தென்னாபிரிக் காவை உருவாக்குவதற்காகத் தென்னாபிரிக்காவின் அனைத்து
சமூகத்தவர்களுக்கும் நெல்சன் மண்டேலா அழைப்பு விடுத்து அனைவரையும்
அரவணைத்துக் கொண்டார்.
அதேபோல, புதிய இலங்கையைக் கட்டி எழுப்புவதற் காக
இலங்கைத் தீவின் அனைத்து சமூகங்களுக்கும்  தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள்
அனைவருக்கும்  நெல் சன் மண்டேலாப் பாணியில் தாம் அழைப்பு விடுக்கின் றார்
என்றும் அந்த உரையில் ரணில் விக்கிரமசிங்க கூறி யிருந்தார்.
அதன்
பின்னர் தனிப்பட்ட உரையாடலின் போதும் ரணில் விக்கிரமசிங்க இவ்விடயம்
குறித்து "உதயன்', "சுடர் ஒளி' பிரதிநிதியிடம் மேலும் சில கருத்துகளை வெளி
யிட்டிருக்கின்றார்.
"நெல்சன் மண்டேலா வழிகாட்டிய பாணியில் நாங் கள் 
சுபீட்சமும் இன சௌஜன்யமும், அமைதியும் சமா தானமும் மிக்க  புதிய இலங்கையை
உருவாக்க வேண்டு மானால் முதலில் எங்கள் இனங்களுக்கிடையிலான கசப்
புணர்வுகள் நீக்கப்படவேண்டும்.  பழைய காழ்ப்புணர்வு கள் களையப்பட
வேண்டும். புரிந்துணர்வும் நல்லிணக்கமும் ஏற்படவேண்டும். அவை ஏற்பட்டால்
மட்டுமே அத்தகைய புதிய இலங்கையை நாம் கட்டியெழுப்ப முடி யும். அதற்கு ஒரு
புறத்தில் தலதா மாளிகை மீதான தாக்கு தல் மறக்கப்பட வேண்டும். மறுபுறத்தில்
யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டமையை நாம் மறக்கவேண் டும். அதேபோல
விடுதலைப் புலிகள் இழைத்த தவறு களை மறந்து நாம் மன்னிக்க முன்வரவேண்டும்.
அதே சமயம், மற்றப் பக்கத்தில் இராணுவத்தினர், படையினர் மீதான
குற்றச்சாட்டுகளையும் நாம் கைவிடத் தயாராக வேண்டும். அப்படிச் செயற்பட்டு
அனைவரையும் அர வணைக்கும் பண்பியல்பு நமக்கு வந்தால் மட்டுமே நம் மத்தியில்
நல்லிணக்கமும், புரிந்துணர்வும் உருவாகி புதிய இலங்கைக்கான சகாப்தம்
தோற்றும்''  என்று ரணில் கூறியிருக்கின்றார்.
இன்றைய கட்டத்தில் இது ஒரு புதிய கருத்தியல் சிந் தனையாகவே நோக்கப்பட வேண்டும்.
இலங்கைத்
தீவில் அமைதித் தீர்வும், புரிந்துணர்வும், நல்லிணக்கமும் எட்டப்பட
வேண்டும் என வலியுறுத் தும் சர்வதேசம்  குறிப்பாக மேற்குலகு  அதற்கு அடிப்
படையாக அமையும் ஒரு முக்கிய விடயத்தைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தி
வருகின்றமை இங்கு நோக்கற்பால தாகும்.
இலங்கையில் இனப் பிணக்கு மிக
மோசமான யுத்த மாக அரங்கேறிய சமயத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள்,
யுத்தக் குற்றங்கள், அப்பாவிகளின் படுகொலை கள், வேண்டுமென்றே இலக்கு
வைத்து பொதுமக்களைக் கொன்றொழித்து அவர்களின் சொத்துக்களை நாசம் செய்த
அடக்குமுறை அத்துமீறல்கள் போன்றவற்றுக்குக் காரணமான நபர்களை அடையாளம்
கண்டு, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, அத்தகைய அடாவடித்தனங்
களுக்காகப் பொறுப்பாக்குவது வெளிப்படையாக மேற் கொள்ளப்பட வேண்டும்.
அப்படிச் செய்வதன் மூலமே இலங்கைத் தீவில் நல்லிணக்கத்துக்கும்
புரிந்துணர்வுக்கு மான அடிப்படைச் சூழலை ஏற்படுத்த முடியும் என மேற் குலகு
வெளிப்படையாகவே வற்புறுத்தி வருகின்றது.
ஆனால் அந்த விடயத்தில் நியாயம்
செய்து, நீதியை நிலைநிறுத்த மறுத்து வரும் இலங்கையின் ஆட்சிப்பீடம்,
மறுபுறத்தில் பன்னீராயிரத்துக்கும் அதிகமான விடுத லைப் புலிகள் இயக்க
உறுப்பினர்களைத் தடுத்து வைத்து  செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுப்
பிரதிநிதிகள் கூட அவர்களைச் சந்திக்க முடியாத வகையில் சிறையில் அடைத்து 
சட்ட நடவடிக்கை என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கின்றது.
இந்தப்
பின்புலத்தில்தான் எல்லாத் தவறுகளையும் மறந்து, மன்னித்து, புதிய
இலங்கையைக் கட்டியெழுப் பும் அழைப்பை விடுக்கின்றார் எதிர்க்கட்சித்
தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
ஆனால் அந்த அழைப்பின் பிரகாரம் புதிய
இலங்கை யைக் கட்டியெழுப்புவதாயின் சில அடிப்படை நியாயங் களை   வரலாற்று
உண்மைகளை   சரித்திர யதார்த்தங் களை  இலங்கைத் தீவின் ஆட்சி அதிகாரத்தைத்
தம் கைவசம் வைத்திருக்கும் பௌத்த, சிங்களப் பெரும் பான்மை இனம்
ஒப்புக்கொண்டு, ஏற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் அமைதித் தீர்வு காண
முன்வர வேண்டும்.
அந்த உண்மைகள் எவை?
இலங்கையின் வடக்கும்,
கிழக்கும் சரித்திர காலம் தொட்டு இலங்கைத் தமிழர்கள் பூர்வீகத் தாயகமாக
வாழ்ந்து வரும் பிரதேசங்கள். தனித்துவமான அந்தத் தமி ழினத்துக்கு
இறைமையும், சுயநிர்ணய உரிமையும் உள் ளன. தமிழர் தேசம் மீதான இராணுவப்
போராட்டத்தில் தென்னிலங்கை ஆட்சிப்பீடம் வென்றுவிட்டாலும் இந்த சரித்திர
உண்மைகள் மறைக்கப்படக்கூடியவையோ, மறுக்கப்படக்கூடியவையோ அல்ல.
அதனை
ஒப்புக்கொள்ள பௌத்த  சிங்கள தேசம் தயார் என்றால், ரணில் கூறும்  மண்டேலா
பாணியிலான  புதிய இலங்கையை உருவாக்குவது அப்படி ஒன்றும் கஷ்டமான
காரியமல்ல. தென்னிலங்கை அதற்குத் தயாரா?

No responses yet
Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்