Apr
17
2010
http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1271417355&archive=&start_from=&ucat=1&
மனிதன்.com
பிரிட்டன் தேர்தலில் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி போட்டியிடும் (படங்கள் இணைப்பு)
|

இக்கட்சிக்கு பிரித்தானியாவில் தடை ஏற்படலாம் என முன்னர்
கூறப்பட்டிருந்தது. ஆனால் கடந்த மார்ச் 19 ஆம் திகதி நடக்கவிருந்த
விசாரணையை தேர்தல் ஆணையகம் விலக்கியுள்ளதோடு, அக்கட்சியின் பதிவை மீண்டும்
ஏற்றுள்ளது.
இக்கட்சியின் தலைமையத்தை லொமார்ட் பிசினஸ் பார்க்,
பேலிவே வேயில் அமைத்துள்ளமையானது அதன் 24 மணிநேரப் பாதுகாப்பைப்
பயன்படுத்தவெனக் கூறியுள்ள சுப்ரமணியம், இந்த மாத ஆரம்பத்தில் கார்டியனில்
தாம் கொடுத்திருந்த பேட்டியை அடுத்து தாம் கைது செய்யப்பட்டுவிட்டோமா என
அச்ச நிலை நீடித்ததாகவும் தெரிவித்தார்.
தம்மைக் கைதுசெய்து
விட்டதாகக் கூட சில தமிழ் வானொலிகள் செய்தி வெளியிட்டதாகவும் அவர்
தெரிவித்தார். ஏனெனில் அப்பேட்டியில் அவர் தமிழ் மக்களின் விடுதலைக்காக
போராடிவரும் புலம் பெயர் அமைப்புக்களுடன் இணைந்து தாம் போராட்டத்தை
முன்கொண்டு செல்வோம் என்றும் கட்சிச் சின்னமாக புலிச்சின்னத்தையே
பிரிட்டனில் பதிவுசெய்ததாகவும் கூறியிருந்தார்.
ஆனால்
இதுகுறித்துப் பேசிய தேர்தல் திணைக்களப் பேச்சாளரும் வேறொரு உள்துறை
அலுவலகத்தரும், பயங்கரவாதச் சட்டங்களை அமுல்படுத்தவேண்டியது போலிசாரே எனத்
தெரிவித்தார். ஆனால் பாலசுப்ரமணியத்துக்கு எதிராக நடவடிக்கை ஏதும்
எடுக்கப்படுமா என குரோய்டன் பொலிசாரிடம் காடியன் செய்தியாளர் கேட்டபோது,
பொலிசார் எதும் கூற மறுத்து விட்டதாக, காடியன் இணையம் தகவல்
வெளியிட்டுள்ளது.




|
|
<<
B
கருத்து ஒன்றை விடவும்