Apr 22 2010
திக்குவாய்க்கு
திக்குவாய்க்கு மரபணு மூலம் சிகிச்சை
[ புதன்கிழமை, 14 ஏப்ரல் 2010, 07:09.51 பி.ப GMT ]
திக்கு வாய் வியாதி உடையவர்களுக்கு சிகிச்சை முறை என்றால் அது
அவர்களது மனநிலையை உறுதிப்படுத்தும் வகையில் மட்டுமே
அமைந்திருந்தது.
அதாவது தனக்கு திக்கு வாய் என்ற கவலையை குறைப்பதற்கான
பயிற்சியும், தெளிவாகப் பேசுவதற்கு எலக்ட்ரானிக் கருவியுமே
பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ள மரபணுக்களைப்
பயன்படுத்தி புதிய மருந்தை உருவாக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை
தெரிவித்து உள்ளனர்.
அதாவது உடலில் உள்ள 3 மரபணுக்கள்தான் திக்கு வாய்க்கு காரணமாக
அமைகிறது.
இவற்றின் செயல்படும் விதத்தில் மாறுபாடு ஏற்பட்டால்
பேச்சுத் திறனிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. வேறுசில
வளர்ச்சிதை மாற்றத்திலும் இவை பங்காற்றுகின்றன. எனவே
மரபணுவின் மூலம் திக்கு வாய்க்கு விரைவில் தீர்வு
காணலாம்.