Apr 23 2010

தமன்னாவின் சம்பளம் 1 கோடி

Published by at 7:30 pm under மின்ன‌ஞ்ச‌ல்

http://www.viduppu.com/view.php?2a24OTj4b43aabj04actHPZde2eBZJT2cd33lnB3e0dLZLtPce03j5GG2cd4Thm4a0

MailPrint
தமன்னாவின் சம்பளம் 1 கோடி..!?
[ Tuesday, 20 April 2010, 07:10.36 PM GMT +05:30 ]
நடிகை தமன்னா பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். அவருடைய தாய்மொழி சிந்தி.
இவர் முதன்முதலாக நடித்த தமிழ் படம், `கேடி.` அவருக்கு திருப்புமுனையாக
அமைந்த படம், `கல்லூரி.`

அந்த படம், எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்றாலும், தமன்னாவுக்கு நல்ல
பெயர் வாங்கி கொடுத்தது.

அதையடுத்து தமன்னா, `அயன்` படத்தில் சூர்யா ஜோடியாக நடித்தார். அந்த படம்
மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, தமன்னாவின் `மார்க்கெட்` அந்தஸ்து
உயர்ந்தது. 7 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த அவர், 40 லட்சமாக தனது
சம்பளத்தை உயர்த்தினார்.

என்றாலும், `கால்ஷீட்` கொடுக்க முடியாத அளவுக்கு அவருக்கு புதிய பட
வாய்ப்புகள் வந்து குவிந்தன. அதைத் தொடர்ந்து தமன்னா தனது சம்பளத்தை 50
லட்சமாக உயர்த்தினார். `பையா` படத்துக்கு, அவர் 50 லட்ச ரூபாயை சம்பளமாக
வாங்கினார்.

`பையா` படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் சாதனையுடன் வெற்றிகரமாக
ஓடுவதால், தமன்னா இப்போது தனது சம்பளத்தை 1 கோடியாக உயர்த்தி விட்டார்.
இனிமேல் அவர் பிரபல கதாநாயகர்களுடன் மட்டுமே ஜோடியாக நடிப்பது என்றும்
முடிவு எடுத்து இருக்கிறார்.

No responses yet




Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.