Apr 24 2010
அமெரிக்க செய்தி இன்டர்நெட் பயன்படுத்து ம் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப ்பாடு
அமெரிக்க செய்தி
இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு
[ வியாழக்கிழமை, 22 ஏப்ரல் 2010, 05:42.43 பி.ப GMT ]
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல், தனது மகள்கள் இருவரும்
இன்டர்நெட் பயன்படுத்த, கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல், சமீபத்தில் தனது மகள்கள்
மலியா(11), சாசா(8) ஆகியோருடன் மெக்சிகோவில் சுற்றுப் பயணம் செய்தார்.
ஒபாமா அதிபராக பதவியேற்ற பின், மிஷெல் முதல் முதலாக தனது கணவர் இல்லாமல்
மேற்கொண்ட பயணம் இது.
இந்த சுற்றுப் பயணத்தின் போது, `டிவி` பார்ப்பதற்கும், மொபைல் போன்களை
பயன் படுத்துவதற்கும் தனது மகள்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தார்
மிஷெல்.குறிப்பாக, இன்டர்நெட் பயன்படுத்துவது தொடர்பாக மலியாவுக்கும்,
சாசாவுக்கும் கடுமையான கட்டுப் பாடுகளை அவர் விதித்தார்.இதுகுறித்து
மிஷெல் கூறியதாவது:
தற்போதுள்ள இளைய தலைமுறையினர் இன்டர்நெட் பயன்படுத்துவதில் அதிக
நேரத்தைச் செலவிடுகின்றனர். இதில் நல்ல விஷயமும் உள்ளது; தவறான
விஷயங்களும் உள்ளன. குறிப்பாக, `பேஸ்புக்` போன்ற தளங்களை
பயன்படுத்துவதில், ஏராளமான பிரச்னைகள் உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து தங்கள் குழந்தைகளுக்கு, பெற்றோரும், ஆசிரியர்களும்
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தவறான தளங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, என்
மகள்களுக்கு எடுத்துக் கூறியுள்ளேன். இந்த விஷயத்தில் அவர்களுக்கு
கட்டுப்பாடும் விதித்துள்ளேன். குழந்தைகள் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து
என்ன செய்கின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும். நானும், அதிபர்
ஒபாமாவும், எங்கள் குழந்தைகளுடன் பேசுவதற்கு அதிக நேரத்தைச்
செலவிடுகிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.இவ்வாறு மிஷெல்
கூறினார்.