Apr 24 2010
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபா கரன் இன்னும் உயிருடன் உள்ளார்
http://www.puthinamnews.com/?p=9062
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்னும் உயிருடன் உள்ளார்.
அவரது மரணத்தை இந்தியா இன்னும் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை என்று பாமக
எம்எல்ஏ வேல்முருகன் சட்டப் பேரவையில் கூறினார். தமிழகம் வந்த
பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பியதைக் கண்டித்து சட்டமன்றத்தில்
பேசிய வேல்முருகன்,
“பாகிஸ்தான், சீனா மற்றும் பல நாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக
இந்தியா வருகிறார்கள்.
அவர்களையெல்லாம் அனுமதிக்கும் அரசு தமிழீழ விடுதலைக்காக போராடிவரும்
தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் தாயாரை அனுமதிக்கவில்லை.
தமிழக மக்களை நம்பி சிகிச்சைக்காக வந்த அந்த வயதான தாயை அனுமதிக்காதது
ஒரு மனிதநேயமற்ற, ஈவிரக்கமற்ற செயல், உண்மையாக இது கண்டிக்க தக்க செயல்.
மனிதநேயமுள்ள எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பிரபாகரனின்
தாயாருக்கு மருத்துவ சேவை அளிக்க வேண்டும். அந்த செலவை தமிழக அரசே செய்ய
வேண்டும் என்றார்.
சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், பிரபாகரன் இறந்துவிட்டார் என்று
கூறியபோது அதற்கு மறுப்பு தெரிவித்தார் வேல்முருகன். பிரபாகரன் இன்னும்
உயிரோடு இருக்கிறார். இதுவரை இலங்கை அரசாங்கம் அவரது இறப்புச் சான்றிதழை
இந்திய அரசுக்கு அளிக்கவில்லை. அவருடைய பிணக்கூறு ஆய்வு சான்றிதழையும்
அளிக்கவில்லை. இந்திய அரசும் அவருடைய இறப்பை இன்னும் அறிவிக்கவோ உறுதி
செய்யவோ இல்லை என்றார்.