Apr 26 2010
விடுதலைப்புலிகளின் இரண்டாம் க ட்ட தாக்குதலை சமாளிக்க தயார் நிலையில் இருப் பதாக இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத் தபய ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.
http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=7481#7481
கொழும்பு : விடுதலைப்புலிகளின் இரண்டாம் கட்ட தாக்குதலை சமாளிக்க தயார்
நிலையில் இருப்பதாக இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே
தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர், முதல் கட்ட
போர் முடிவடைந்து விட்டதாகக் கூறியுள்ளார். இரண்டாம்கட்ட போர்
வேறுவடிவத்தில் இருக்கும் என்றும், அதனை சமாளிக்க ராணுவ நடவடிக்கைகள்
தயார் நிலையில் இருக்கவேண்டியது அவசியம் என்றும் கோத்தபய
தெரிவித்துள்ளார். புலிகள் மீண்டும் தலைதூக்குவதைத் தாங்கள் அனுமதிக்க
முடியாது என்றும், புலிகளின் சர்வதேச கட்டமைப்பை ஒடுக்க, அரசு எடுக்கும்
நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் தடையாக இருப்பதாகவும் அவர்
கூறியுள்ளார்.