Apr 27 2010
அவரது சகோதரர ் சூசக தகவல்
http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=7488#7488
பிரபாகரன் உயிருடன் உள்ளார்: அவரது சகோதரர் சூசக தகவல்
சென்னை: விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளதாக,
அவரது சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரன் குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு
அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டென்மார்க்கில் வசித்து வரும் பிரபாகரனின் சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரன்
அண்மையில், அலைகள் இணையதளத்திற்கு பேட்டியளித்ததன் மூலம், அவர் தன்னை
வெளியுலகிற்கு அடையாளம் காட்டிக்கொண்டுள்ளார். இந்நிலையில், ‘குமுதம்
ரிப்போர்ட்டர்’ இதழுக்கு வேலுப்பிள்ளை மனோகரன் பிரத்யேகமாக
பேட்டியளித்துள்ளார். அப்போது, இலங்கையில் போர் முடிவுற்றபோது, பிரபாகரன்
மரணமடையவில்லை, பாதுக்காப்பாக இருக்கிறார் என்று முதலில் கூறிய கே.பி.,
பிறகு, அவர் வீரமரணம் அடைந்துவிட்டதாக கூறியதாகவும், இப்படி ஒரு இரண்டுங்
கெட்டான் பதிலை பிரபாகரன் தன்வாழ்வில் என்றுமே கூறியது கிடையாது என்று
நீங்கள் தெரிவித்திருந்தீர்கள் என்றும் எமது செய்தியாளர் கேள்வி
எழுப்பினார். இதற்கு பதிலளித்த மனோகரன், உறைந்த மௌனத்தால், தம்பி ஏதோ ஒரு
செய்தியை உலகிற்கு தெரிவித்துள்ளார் என்பதுதான் பதில் என்று கூறினார்.
மௌனத்தைப் போல சிறந்த, சரியான பதில், வார்த்தைகளில் இருப்பதில்லை
என்றும், பிரபாகரன் எந்தவொரு கேள்விக்கும் இரண்டு பதில்களை கொடுத்தது
கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பிரபாகரன் தற்போது மௌனமாக
ஒரு பதிலை கொடுத்துள்ளதாகவும் மனோகரன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
இதன் மூலம், பிரபாகரன் உயிருடன் இருப்பதை அவர் சூசகமாக உணர்த்தியுள்ளதாக
தமிழ் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.