Apr 29 2010
see this
மீட்பு
விடுதலைப் புலிகளின் சின்னங்களை அழிப்பதால் தமிழர்களுக்கு நன்மை
செய்யமுடியாது : பிரிகேடியர் சரத் விஜயசிங்க
இலக்கியவாதியாக, போராளியாக, அரசியல்வாதியாக, ஊடகவியலாளராக பல்பரிமாணம்
கொண்ட சிவராம்! இன்று 5ம் ஆண்டு நினைவு நாள்
முள்ளிவாய்க்கால் வீரவணக்கம்! முத்துக்குமாருக்கு தஞ்சையில் சிலை திறப்பு
செய்தி
வங்கிகளில் உள்ள உரிமைக்கோரப்படாத சொத்துக்கள் அரசுடமை ஆக்க திட்டம்.
[ வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2010, 12:58.11 PM GMT +05:30 ]
இலங்கையின் வங்கிகளில் உள்ள உரிமைக் கோரப்பட்டாத சொத்துக்களை
அரசுடமையாக்கும் வகையில் மத்திய வங்கி பொறுப்பேற்கவிருப்பதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
அந்த சொத்துக்களுக்கு காப்புறுதி வழங்கும் திட்டம் என்ற பெயரில் இந்த
நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இலங்கையின் வர்த்தக வங்ககளின் வைப்பாளர்களின் கைவிடப்பட்ட சுமார் 371
மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் தற்போது அரசுடமையாக்கும் முயற்சிகள்
மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிதி நேரடியாக அரசாங்கத்தின் திறைசேரிக்கு மாற்றப்பட்டு அது
வைப்பாளர்கள் காப்புறுதி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட போதும் வெளிநாடுகளில் உள்ள
புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்ப்பை தெரிவித்தமையை அடுத்து அவை
கைவிடப்பட்டன.
இந்த நிலையில் மீண்டும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
எனினும் தமது நடவடிக்கைக்கு முன்னர் மீண்டும் வைப்பாளர்கள் தமது
சொத்துக்களுக்காக உரிமைக் கோர முடியும் எனவும் மத்திய வங்கி
அறிவித்துள்ளது