இவற்றிற்கான களஞ்சியம் April, 2010

Apr 25 2010

இலங்கை போர் முடிவடைந்த பிறக ு 500க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் மலேசிய ாவிற்கு தப்பிவந்ததாகவும்

http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=7443#7443

கோலாலம்பூர் : இலங்கை போர் முடிவடைந்த பிறகு 500க்கும் மேற்பட்ட
விடுதலைப்புலிகள் மலேசியாவிற்கு தப்பிவந்ததாகவும், ஆனால் அவர்கள்
திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாகவும் மலேசிய உள்துறை அமைச்சர் ஹிஷாமுதீன்
ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு மே மாதம்
இலங்கையில் போர் முடிவடைந்த பிறகு, அங்கிருந்து விடுதலைப் புலிகளின்
முக்கிய தலைவர்கள் வெளியேறியதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு
ஆகஸ்ட் மாதம் முதல் சென்ற மாதம் வரை 500க்கும் மேற்பட்ட புலிகள்
அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் அகதிகளாக தமது நாட்டில் தஞ்சமடைய
வந்ததாகவும், ஆனால், அவர்களைக் கைது செய்து நாடுகடத்தி விட்டதாகவும்
மலேசிய அமைச்சர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள்
பற்றிய விவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை.

No responses yet

Apr 24 2010

imagesஅன்பான தமிழக உறவுகளே!

http://www.govtamileelam.org/gov/index.php/component/content/article/42-rotatingnews/181-2010-04-20-17-42-24?Itemid=107

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெற்றியுற தமிழக மக்களின் ஆதரவும்
அரவணைப்பும் அவசியம்!
E-mail Print PDF

imagesஅன்பான தமிழக உறவுகளே!
ஈழத் தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பான தமிழீழத் தனியரசினை தாயகம்,
தேசியம், சுயநிர்ணயம், இறைமை போன்ற உரிமை நிலைக் கோட்பாடுகளின் வழி
நின்று – தமிழக மற்றும் இந்திய மக்களினதும் அனைத்துலகசமூகத்தினதும்
அதரவுடன்

வென்றெடுக்கும் நோக்குடன் ஜனநாயக விழுமியங்களுக்குட்பட்டு நாடு கடந்த
தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டு வருவதனைத்
தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

இந் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்குத் தங்கள் ஆதரவினை
வேண்டியே இம் மடலினை வரைகிறேன்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்கான ஒரு
அரசியற் கட்டமைப்பு. இது சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசை
அமைப்பதற்காகப் பாடுபடும். இவ் அரசாங்கம் ஒரு வலுமையமாக உருவாகுவதற்கு
உலகளாவிய தமிழ்மக்களின் ஆதரவும் குறிப்பாகத் தமிழக மக்களது ஆதரவும்
அரவணைப்பும் அவசியமானவை

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பதனை
ஆய்வு செய்து பரிந்துரை செய்வதற்காக திட்டமுன்மொழிவு செய்யப்பட்ட 2009
ஆம் ஆண்டு யூன் மாதம் 16 ஆம் நாளன்று மதியுரைக்குழு ஒன்றும்
அமைக்கப்பட்டிருந்தது.

இம் மதியுரைக்குழுவில் தமிழீழ விடுதலை இலட்சியத்தோடு தம்மை இறுகப்
பிணைத்துக் கொண்ட பின்வரும் உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் (அமெரிக்கா)
பேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன் (கனடா)
வைத்தியக் கலாநிதி நாகலிங்கம் ஜெயலிங்கம் (அமெரிக்கா)
சட்ட அறிஞர் ஜெயப்பிரகாஸ் ஜெயலிங்கம் (அமெரிக்கா)
சட்ட அறிஞர் கரன் பார்க்கர் (அமெரிக்கா)
பேராசிரியர் பழனியப்பன் இராமசாமி (மலேசியா)
சட்ட அறிஞர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் (அமெரிக்கா)
பேராசிரியர் பீற்றர் சால்க் (சுவீடன்)
வைத்தியக் கலாநிதி சிவனேந்திரன் சீவநாயகம் (அவுஸ்திரேலியா)
பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா (சுவீடன்)
பேராசிரியர் முத்துக்குமாரசாமி சொர்ணராஜா (பிரித்தானியா)
கலாநிதி அமுது லூயிஸ் வசந்தகுமார் (பிரித்தானியா)

இம் மதியுரைக்குழுவினர் தமது ஆய்வின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ
அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பாக மக்கள் கருத்துப்பரிமாற்றத்தின் பின்
விடுத்த இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
அமைக்கப்படுகிறது. இவ் அறிக்கையினை எமது இணையத்தளமாகிய
www.govtamileelam.org இல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது மக்கள் மத்தியில் இருந்து இதற்கென
நடாத்தப்படும் நேரடித் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள்
பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்படுகிறது. இதற்கான தேர்தல்கள் மே மாதம் 2
ஆம் நாள் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நடைபெற
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது
அரசவையினை மே மாதம் 17-19 நாட்களுக்கிடைப்பட்ட காலப்பகுதியில்
கூட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை இக் காலப்பகுதிக்குள்
கூடுவது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து
விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு தமிழ் மக்கள்
கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையில் 135 பிரதிநிதிகள்
அங்கம் வகிப்பார்கள். முதலாவது அரசவையின் ஆயுட்காலம் ஆகக் கூடிய அளவு
மூன்று ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலாவது அரசவை விரும்பும்
பட்சத்தில் அதற்கு முன்னரே அடுத்த தேர்தலை நடத்தலாம்.

விடுதலைப்புலிகளுக்குப் பிந்திய காலகட்டத்து அமைப்பு (post LTTE
organisation) என்ற அடிப்படையில் இவ் அமைப்பு உருவாக்கப்படவில்லை. நாடு
கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுவது தமிழீழ விடுதலைப்போராட்டத்தின்
தொடர்ச்சியாகவே அமைகிறது. தாயகத்தில் தேசியத்தலைவரின் தலைமையில்
அமைக்கப்பட்டிருந்த நடைமுறை அரசு சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படையினரால்
சிதைக்கப்பட்டமைக்கு உலக அரசுகள் சிறிலங்கா அரசுக்கு வழங்கிய ஆதரவு
முக்கியமானதொரு காரணம். நம் கண்முன்னால் நடந்து முடிந்த ஒரு மிகப்பெரும்
இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த முடியாதவர்களாக நாம் தவித்து நின்றோம்.
இதனால் உலக நாடுகளின் ஆதரவினை எமது பக்கம் வென்றெடுப்பதற்கென வலுவானதும்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதுமான பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பு ஒன்று
அவசியம் என்றும் அதுவும் தற்போதுள்ள சூழ்நிலையில் தாயகத்திற்கு அப்பாலே
நிறுவப்பட வேண்டிய யதார்த்தம் உணரப்பட்டமையால் இவ் அமைப்பு
உருவாக்கப்படுகிறது.

அனைத்துலகத் தளத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவினை வென்றெடுப்பதற்காக
உருவாக்கப்படும் இவ் அமைப்பு தமிழீழ விடுதலைக்காத் தமது இன்னுயிர்களை
ஈகம் செய்த மாவீரர்களையும் மக்களையும் மனதில் இருத்தி அவர்களின் கனவுகளை
நனவாக்க அயராது உழைக்கும். அனைத்துலகரீதியான ஏற்புடமையினைப்
பெற்றுக்கொள்ளும் வகையில் இவ் அமைப்பு ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு
அமைக்கப்பட்டு அரசியல், இராஜதத்திர வழிமுறைகளுக்கூடாகத் தனது பணிகளை
முன்னெடுக்கும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தும்
இத் திட்டத்துடன் தொண்டர்களாக தம்மை இணைத்துக் கொள்ளவும்
பலநூற்றுக்கணக்கான தமிழக உறவுகள் தமது பெயர்களை எமது இணையத்தளத்தினூடாகப்
பதிவு செய்திருந்தனர். இவர்களின் கரங்களை நாம் தோழமை உணர்வுடன் இறுகப்
பற்றிக் கொள்கிறோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான
செயற்பாடுகளைத் தமிழகத்தில் விரிவாக்கம் செய்யும் தருணத்தில் தங்களுடன்
நாம் தொடர்பு கொள்கிறோம்.

இவ்விடத்தில் இன்னுமொரு விடயத்தினையும் நான் தெளிவுபடுத்த
விரும்புகிறேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து தமிழகத்தின்
சஞ்சிகையொன்றில் இவ் வாரம் வெளியாகியிருந்த ஒரு கட்டுரையில் நான்
குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ள ஆயுதப்போராட்டம் குறித்த கருத்துக்கள்
எவையும் என்னால் தெரிவிக்கப்படாதவை. ஆயுதப்போரட்டம் பற்றி எதுவுமே
என்னுடன் பேசப்படவில்லை. இவை தவிர அதில் உள்ள ஏனைய சில விடயங்களும் எனது
கருத்துக்கள் அல்லாதவை. உண்மையில் நான் அச் சஞ்சிகைக்கு பேட்டி எதனையும்
வழங்கியிருக்கவுமில்லை. அச் சஞ்சிகையின் கட்டுரையாளருடன் நான்
மேற்கொண்டிருந்தது தேர்தல் நடைமுறை தொடர்பான ஒரு சிறு உரையாடல் மட்டுமே.
நான் குறிப்பிடாத, எனது கருத்துக்கள் அல்லாத விடயங்கள் எனது பெயரில்
பதிவு செய்யப்பட்டிருந்தமையால் இம் மறுப்பை இவ்வித்தில் பதிவு
செய்கிறேன்.

தமிழக மக்களும் ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலையை தமது நெஞ்சிருத்திச்
செயற்படும் தலைவர்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் ஈழத்
தமிழர் தேசத்தின் விடுதலை மீதும் தாங்கள் கொண்டிருக்கும்
பற்றுறுதியினையும் அதற்காக வழங்கி வரும் பேருழைப்பையும் நாம் என்றும்
பெரும் மதிப்புடன் நினைவிற் கொள்கிறோம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்
தொடர்ச்சியாக அமையும் இந் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வெற்றிகரமாக
அமைத்திட தங்கள் ஆதரவையும் அரவணைப்பையும் எதிர்பார்த்து நிற்கிறோம்.

No responses yet

Apr 24 2010

பிரிட்டிஷ் வானிலை முன்னறிவிப்பு

http://www.z9world.com/view.php?2bdAmAQ0eae0dcdXlm4ye0ec4ZLBZBB04b40q886eW2cd3eQe0EE24dc2adBndP2ca40dA4OXv3de2ec60MmY4b0

ஐஸ்லாந்து எரிமலை சாம்பல் : தேவைக்கு அதிகமான எச்சரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 20 ஏப்ரல் 2010, 06:08.01 பி.ப GMT ]
ஐஸ்லாந்திலுள்ள எரிமலை வெடித்து சிதறியதால் வெளியான சாம்பலின் அளவுகள்
மற்றும் அதன் தன்மைகளை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள், அறிவியல்
குறிப்புகள் மற்றும் ஆய்வுகளைக் காட்டிலும் கணினி மூலமான வரைபடங்களை
வைத்து தேவைக்கும் அதிகமாக கூடுதலான எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து
விட்டார்கள் என்கிற விமர்சனம் தற்போது எழுந்துள்ளது.

இந்த எரிமலை வெடிப்பு விமானப் போக்குவரத்தின் மீது ஏற்படுத்திய
முன்னுதாரணமற்ற பாதிப்பு காரணமாக ஐரோப்பிய வான் பரப்பை மூட எடுக்கப்பட்ட
முடிவுக்கு பின்னுள்ள அறிவியல் அடிப்படையை பல விமான நிறுவனங்கள்
கேள்விக்குள்ளாக்கியுள்ளன.

பிரிட்டனின் வானிலை முன்னறிவிப்பு நிறுவனம் உண்மைகளின் அடிப்படையில்
செயல்படாமல், அச்சத்தின் அடிப்படையில் செயல்பட்டது என்று விமர்சனங்களை
எதிர்கொண்டிருக்கிறது.

விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் தர, உலக அளவில் அமைந்துள்ள
ஒன்பது எரிமலை சாம்பல் தகவல் மையங்களில் இந்த பிரிட்டிஷ் வானிலை
முன்னறிவிப்பு நிறுவனமும் ஒன்று.

ஐஸ்லாந்து எரிமலை கடந்த வாரம் மீண்டும் வெடித்தபோது, பிரிட்டிஷ் வானிலை
முன்னறிவிப்பு நிறுவனம் பயன்படுத்திய கணினி மாதிரிகள் இந்த எரிமலை
சாம்பல் துகள்கள் விரைவாக பிரிட்டன் மற்றும் வட ஐரோப்பாவை மூடிவிடும்
என்று கணித்தன.

இந்த கணிப்புதான், சுற்றுச்சூழலில் எந்த அளவுக்கு சாம்பல் துகள்கள்
நிறைந்திருக்கக்கூடும் என்பது குறித்த துல்லியமான தரவுகள் இல்லாத
நிலையிலும், வான்பரப்பை மூட எடுக்கப்பட்ட முடிவிற்கு முக்கிய அடிப்படையாக
அமைந்தது.

இந்த முடிவு விஞ்ஞானிகள் கூறும் முன்னெச்சரிக்கை கோட்பாடு என்பதனை
அடிப்படியாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த கோட்பாட்டின்படி, எந்த ஒரு
நடவடிக்கையையும் எடுப்பதில் ஒரு வரையறுக்கப்படாத ஆபத்து இருந்தால், அந்த
நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று பிரேரிப்பவர்கள்தான், அந்த நடவடிக்கை
ஒரு பாதுகாப்பான நடவடிக்கை என்பதை நிரூபிக்க வேண்டியர்கள் ஆவார்கள்.

எரிமலை வெடிப்பு போன்ற அபூர்வமாக நிகழும் சம்பவங்களை ஆராயும்போது, இது
போன்ற கணினி மாதிரிகளைத்தான் ஓரளவுக்கு நாம் நம்ப வேண்டியிருக்கிறது
என்கிறார் இங்கே பிரிட்டனில் எக்சிடர் பல்கலைக்கழகத்தில் ஆபத்து
நிர்வாகத்தில் வல்லுநராக இருக்கும் டாக்டர் ஸ்டிபான் ஹாரிசன்.

பிரிட்டிஷ் வானிலை முன்னறிவிப்பு நிறுவனம் தாங்கள் பலூன்கள் மூலமாகவும்,
லேசர் கதிர்கள் மூலம் எடுத்த அளவீடுகளைக் கொண்டும் சேகரித்த பிந்தைய
தகவல்கள், இந்த சாம்பல் துகள்கள் நிறைந்திருக்கும் பகுதி மற்றும்
அவைகளின் அளவை உறுதிப்படுத்தியிருப்பதாக, தங்கள் தரப்பு நியாயத்தைச்
சொல்கிறார்கள்.

இப்போதைக்கு விஞ்ஞானம் குறித்து சில மிக விவரணமான கேள்விகள்
கேட்கப்படுகின்றன. ஜெட் விமான இயந்திரங்களில் இந்த நுண் துகள்களில் எந்த
அளவு துகள்கள் அடைத்துக் கொள்ளும், எப்போது இந்த சாம்பல் திரள் கலையும்,
போன்ற இந்த மாதிரிக் கேள்விகளுக்கு இப்போதைக்கு அறிவியல் ரீதியாக விடைகள்
தர தேவைப்படும் தரவுகள் இல்

No responses yet

Apr 24 2010

அமெரிக்க செய்தி இன்டர்நெட் பயன்படுத்து ம் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப ்பாடு

http://www.z9world.com/view.php?2bbddnBBddc22QQAA424aaee0EEdd0eeXXO44ccd33mmlT122eeC8866cce00mmM0044b44ZZBLB00

அமெரிக்க செய்தி
இன்டர்நெட் பயன்படுத்தும் விவகாரம் அதிபர் ஒபாமா மகள்களுக்கு கட்டுப்பாடு
[ வியாழக்கிழமை, 22 ஏப்ரல் 2010, 05:42.43 பி.ப GMT ]
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல், தனது மகள்கள் இருவரும்
இன்டர்நெட் பயன்படுத்த, கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல், சமீபத்தில் தனது மகள்கள்
மலியா(11), சாசா(8) ஆகியோருடன் மெக்சிகோவில் சுற்றுப் பயணம் செய்தார்.
ஒபாமா அதிபராக பதவியேற்ற பின், மிஷெல் முதல் முதலாக தனது கணவர் இல்லாமல்
மேற்கொண்ட பயணம் இது.

இந்த சுற்றுப் பயணத்தின் போது, `டிவி` பார்ப்பதற்கும், மொபைல் போன்களை
பயன் படுத்துவதற்கும் தனது மகள்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தார்
மிஷெல்.குறிப்பாக, இன்டர்நெட் பயன்படுத்துவது தொடர்பாக மலியாவுக்கும்,
சாசாவுக்கும் கடுமையான கட்டுப் பாடுகளை அவர் விதித்தார்.இதுகுறித்து
மிஷெல் கூறியதாவது:

தற்போதுள்ள இளைய தலைமுறையினர் இன்டர்நெட் பயன்படுத்துவதில் அதிக
நேரத்தைச் செலவிடுகின்றனர். இதில் நல்ல விஷயமும் உள்ளது; தவறான
விஷயங்களும் உள்ளன. குறிப்பாக, `பேஸ்புக்` போன்ற தளங்களை
பயன்படுத்துவதில், ஏராளமான பிரச்னைகள் உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து தங்கள் குழந்தைகளுக்கு, பெற்றோரும், ஆசிரியர்களும்
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தவறான தளங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, என்
மகள்களுக்கு எடுத்துக் கூறியுள்ளேன். இந்த விஷயத்தில் அவர்களுக்கு
கட்டுப்பாடும் விதித்துள்ளேன். குழந்தைகள் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து
என்ன செய்கின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும். நானும், அதிபர்
ஒபாமாவும், எங்கள் குழந்தைகளுடன் பேசுவதற்கு அதிக நேரத்தைச்
செலவிடுகிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.இவ்வாறு மிஷெல்
கூறினார்.

No responses yet

Apr 24 2010

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபா கரன் இன்னும் உயிருடன் உள்ளார்

http://www.puthinamnews.com/?p=9062

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்னும் உயிருடன் உள்ளார்.
அவரது மரணத்தை இந்தியா இன்னும் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை என்று பாமக
எம்எல்ஏ வேல்முருகன் சட்டப் பேரவையில் கூறினார். தமிழகம் வந்த
பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பியதைக் கண்டித்து சட்டமன்றத்தில்
பேசிய வேல்முருகன்,

“பாகிஸ்தான், சீனா மற்றும் பல நாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக
இந்தியா வருகிறார்கள்.
அவர்களையெல்லாம் அனுமதிக்கும் அரசு தமிழீழ விடுதலைக்காக போராடிவரும்
தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் தாயாரை அனுமதிக்கவில்லை.

தமிழக மக்களை நம்பி சிகிச்சைக்காக வந்த அந்த வயதான தாயை அனுமதிக்காதது
ஒரு மனிதநேயமற்ற, ஈவிரக்கமற்ற செயல், உண்மையாக இது கண்டிக்க தக்க செயல்.
மனிதநேயமுள்ள எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பிரபாகரனின்
தாயாருக்கு மருத்துவ சேவை அளிக்க வேண்டும். அந்த செலவை தமிழக அரசே செய்ய
வேண்டும் என்றார்.

சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், பிரபாகரன் இறந்துவிட்டார் என்று
கூறியபோது அதற்கு மறுப்பு தெரிவித்தார் வேல்முருகன். பிரபாகரன் இன்னும்
உயிரோடு இருக்கிறார். இதுவரை இலங்கை அரசாங்கம் அவரது இறப்புச் சான்றிதழை
இந்திய அரசுக்கு அளிக்கவில்லை. அவருடைய பிணக்கூறு ஆய்வு சான்றிதழையும்
அளிக்கவில்லை. இந்திய அரசும் அவருடைய இறப்பை இன்னும் அறிவிக்கவோ உறுதி
செய்யவோ இல்லை என்றார்.

No responses yet

« Prev - Next »

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.