May 06 2010

பிரித்தானிய செய்தி

Published by at 7:34 am under மின்ன‌ஞ்ச‌ல்

http://www.z9world.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAye0ec4ZPBZdf04b40qi86gg2cd3eQe0EE33dc0adBndP34a4edA4OXv3ce2ac60MmY4d

பிரித்தானிய செய்தி
ஐஸ்லாந்து நாட்டில் மீண்டும் எரிமலை வெடிப்பு!: விமான போக்குவரத்து பாதிப்பு
[ புதன்கிழமை, 05 மே 2010, 09:23.51 மு.ப GMT ]
ஐஸ்லாந்து நாட்டில் மீண்டும் ஒரு எரிமலை வெடித்து சிதறியதால் ஐரோப்பிய
நாடுகளின் வானத்தில் சாம்பல் பரவி விமான போக்குவரத்து கடுமையாகப்
பாதித்துள்ளது.

கடந்த மாதம் ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை ஒன்று வெடித்ததால் வானத்தில்
சாம்பலும் புகையும் சூழ்ந்து ஐரோப்பிய நாடுகளின் விமான போக்குவரத்து
பாதிக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான விமானப் பயணிகள்
பாதிக்கப்பட்டனர். ஒரு வாரக் காலத்திற்குப்பின்னர் புகைமூட்டம்
குறைந்ததால் விமான போக்குவரத்து சீரானது.

இந்நிலையில் ஐஸ்லாந்தில் உள்ள மற்றொரு எரிமலை குமுறி வெடித்துள்ளது.
இதனால் ஐஸ்லாந்து நாட்டின் வானப்பகுதியில் சாம்பலும் புகையும் பரவியது.
இதைத் தொடர்ந்து அந்நாட்டின் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
விமான நிலையங்கள் மூடப்பட்டன. எரிமலை வெடிப்பினால் எழுந்த சாம்பலும்
புகையும் தற்போது ஐஸ்லாந்து எல்லையைத் தாண்டி அயர்லாந்து ஸ்காட்லாந்து
நாடுகளில் பரவி வருகிறது.

இங்கிலாந்து நாட்டு வானத்திலும் சாம்பல் பறப்பதால் அந்நாட்டின் விமான
சேவையும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

கோடை விடுமுறையை ஒட்டி பெரும்பாலான சர்வதேச பயணிகள் ஐரோப்பிய
நாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். எரிமலை சாம்பலால் ஏற்பட்டுள்ள
விமான போக்குவரத்து நிறுத்தம் அவர்களை தவிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது

No responses yet




Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.