May 13 2010
இலங்கையில் தமிழர்கள் பகுதிகளி ல் சிங்களப் பெயர் மாற்றங்கள்
http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=7828#7828
கொழும்பு : இலங்கையில் தமிழர்கள் பகுதிகளில் சிங்களப் பெயர் மாற்றங்கள்
தீவிரமாக நடைபெற்றுவருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் போர் முடிவடைந்த நிலையில், தமிழர்கள் வசித்த பகுதிகளில்
அந்நாட்டு ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழர்கள் யாரும் தங்கள்
சொந்த இடத்திற்குச் செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள்
அமைப்பின் தலைமை நிலையம் இருந்த கிளிநொச்சியைச் சேர்ந்த உருத்திரபுரம்
தற்போது உருத்திரபுர என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உதயநகர்
என்ற பகுதி உதயநகர் மாவத்தை என்று மாற்றப்பட்டுள்ளது. மன்னார்மடு என்ற
பகுதியில் புத்தமத கோயில்கள் புதிதாக உருவாகியுள்ளன. முன்னதாக
மட்டக்களப்பு பகுதியைக் கைப்பற்றிய இலங்கைப் படையினர், அங்குள்ள
வீதிகளுக்கு சிங்களப் பெயரை சூட்டியது போன்று தற்போது வன்னியிலும் இந்த
மாற்றங்கள் தீவிரமாக நடைபெற்று வருவதால் அங்குள்ள தமிழர்கள் பெரும்
அச்சமடைந்துள்ளனர்.