May 13 2010
கனடாவில்
http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=7813#7813
மே 19ஆம் தேதி ஈழத்தமிழர் துக்கநாள் அனுசரிப்பு : கனடாவில்
உயிரிழந்தோருக்காக பிரார்த்தனை
கனடா : இலங்கையில் உயிரிழந்த அப்பாவித் தமிழர்களின் நினைவாக கனடாவில்
உள்ள தமிழர்கள் வரும் மே மாதம் 19ஆம் தேதி அன்று பிரார்த்தனையில் ஈடுபட
இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்டப் போரின்போது ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை
அந்நாட்டு ராணுவம் ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தது. கடந்த மே மாதம் 19
ஆம் தேதி அன்று மட்டும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
அதனை நினைவுகூறும் விதமாக, வரும் 19ஆம் தேதி அன்று துக்கதினமாக அனுசரிக்க
உலகத்தில் உள்ள தமிழர்கள் தீர்மானித்துள்ளனர். கனடாவில் உள்ள தமிழர்கள்
அன்றைய தினம் ஸ்வாகட் பேங்கட் ஹாலில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை
சுடர் ஏற்றி பிரார்த்தனை செய்ய இருப்பதாக கனடா தமிழர் இணையம்
தெரிவித்துள்ளது. அன்றைய தினத்தில் விரதம் இருந்தும் துக்கநாளை
அனுசரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது