May 15 2010
இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக அந ்நாட்டு அதிபர் ராஜபக்ஷே மீது விசாரணை நடத்தப ்பட வேண்டும்
http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=7848#7848
சென்னை : இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே மீது
விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவை அமைப்புத் தலைவர்
பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை இறுதிக்கட்டப் போரின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் அந்நாட்டு
ராணுவத்தால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் நினைவு நாள்
வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் அனுசரிக்கப்படுகிறது.
இதுகுறித்து பழ.நெடுமாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இலங்கையில்
அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ஷே, சரத்பொன்சேகா மற்றும்
அவர்களுக்கு துணை நின்றவர்கள் மீது பன்னாட்டு நீதிமன்றம் விசாரணை நடத்த
வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். போரால் பாதிக்கப்பட்ட அனைவரையும்
அவர்களது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும்,
போராளிகள் என்ற பெயரில் தனி முகாம்களில் அடைத்து சித்ரவதை செய்யப்படும்
12 ஆயிரம் பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அந்த
அறிக்கையில் அவர் கோரியுள்ளார்.