May 17 2010

இலங்கை போரின்போது நடைபெற்றதாக க் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து வி சாரணை நடத்த ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படும் எ ன்று அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள ்ளார்.

Published by ச‌றோ at 9:02 am under மின்ன‌ஞ்ச‌ல்

http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=7707#7707

கொழும்பு : இலங்கை போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள்
குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று அந்நாட்டு
அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுடன் நிகழ்ந்த இறுதி கட்டப்போரின்போது நடைபெற்றதாகக்
கூறப்படும் குற்றச்செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து
விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐநா மற்றும் பல்வேறு நாடுகள் இலங்கை
அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை
மீண்டும் பெறுவதற்கு ஐநா மனித உரிமைகள் சாசனங்களின் முக்கிய மூன்று
விஷயங்களை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம்
தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அந்நாட்டின் போர்க்குற்றச் செயல்கள்
குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட இருப்பதாகவும், இது
சர்வதேச தரத்திற்கேற்ப விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும்
இலங்கை அதிபரின் ஊடகப்பிரிவு இன்று அறிவித்துள்ளது. போரின்போது மனித
உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களே அதனைப் பற்றி விசாரிப்பது வெறும்
கண்துடைப்பு நாடகமாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர்.

No responses yet




Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்