May 17 2010

தமிழர் பகுதிகளை

Published by at 9:22 am under மின்ன‌ஞ்ச‌ல்

http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=7599#7599

இலங்கையில் தமிழர் பகுதிகளில் வினியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களால்
பெரும் பரபரப்பு
கொழும்பு: தமிழர் பகுதிகளை, சிங்களமயமாக்குவதை தடுத்து நிறுத்தாவிட்டால்,
கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று துண்டு பிரசுரங்கள்
வினியோகிக்கப்பட்டுள்ள சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், யாழ்ப்பாணம்
உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களில், சிங்கள பெயர்ப்
பலகைகளை கட்டாயம் வைக்க வேண்டும், சிங்கள சுற்றுலாப் பயணிகளுக்கு வீடுகளை
கட்டாயமாக வாடகைக்கு தர வேண்டும், சிங்களவர்களுக்கு வீடு, நிலம் விற்க
வேண்டும், தனியார் பேருந்துகளில் சிங்கள பாடல்களை ஒலிபரப்ப வேண்டும் என
பல்வேறு வகையில் சிங்களமயமாக்கல் நடவடிக்கைகளில் இலங்கை அரசு
ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், தமிழர் பகுதிகளில் சிங்களர்களை
குடியமர்த்தி, சிங்களமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை
நிறுத்தாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று
எச்சரித்து இலங்கையில், துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு
வருகின்றன. ‘தமிழ்ப் பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம்’ சார்பில்
வழங்கப்பட்டுள்ள அந்த பிரசுரத்தில், தங்கள் சக்தியான விடுதலைப் புலிகளின்
இயங்குநிலை ஸ்தம்பித்துள்ள இந்த வேளையில், சிங்களமயமாக்கலில் இருந்து
தமது தாய் மண்ணையும் தாய் மொழியையும் எதிர்கால சந்ததியையும் காப்போம்
என்று கூறப்பட்டுள்ளது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

No responses yet




Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.