May 18 2010
இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்த மே மாதம் 18ஆம் நாளை துக்கதினமாக அனுசர ிக்க கோரும் ஏராளமான சுவரொட்டிகள் யாழ்ப்பாண த்தில் திடீரென்று ஒட்டப்பட்டுள்ளதால் அந்ந ாட்டு ராணுவம் திகைத்துப் போயுள்ளது.
http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=7905#7905
கொழும்பு : இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்த மே மாதம் 18ஆம் நாளை
துக்கதினமாக அனுசரிக்க கோரும் ஏராளமான சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தில்
திடீரென்று ஒட்டப்பட்டுள்ளதால் அந்நாட்டு ராணுவம் திகைத்துப் போயுள்ளது.
இலங்கை முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இறுதிகட்டப் போரின்போது
ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை அந்நாட்டு ராணுவம் ஈவிரக்கமின்றி
கொடூரமாகக் கொன்று குவித்ததன் முதலாண்டு நினைவு நாள் உலகம் முழுவதும்
உள்ள தமிழர்களால் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி யாழ்ப்பாணத்தில்
ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனையும் மீறி யாழ்ப்பாணம் நகரின் பல்வேறு பகுதிகளில் மே மாதம் 18ஆம்
தேதியை துக்கதினமாக அனுசரிக்கக்கோரும் சுவரொட்டிகள் திடீரென்று ஏராளமாக
ஒட்டப்பட்டுள்ளன. மேலும் துண்டுப் பிரசுரங்களும் மக்களிடையே
விநியோகிக்கப்பட்டன. இது இலங்கை ராணுவத்தினரை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
சுவரொட்டிகளை அகற்றும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.