May 18 2010
இலங்கையில் தமிழர்கள் மீண்டும் வி டுதலைப் போரை விரைவில் தொடங்க இருப்பதாக மதிம ுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=7922#7922
சென்னை : இலங்கையில் தமிழர்கள் மீண்டும் விடுதலைப் போரை விரைவில் தொடங்க
இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றினார். இலங்கையில்
தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள்
ஒன்றிணைய வாய்ப்பே இல்லை என்று ராஜபக்ஷே அறிவித்துள்ளதை அப்போது
சுட்டிக்காட்டினார். தமிழர்களுக்கு விரோதமாக செயல்படும் ராஜபக்ஷே இந்தியா
வருவது, நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதிக்கும் என்று வைகோ எச்சரித்தார்.
இலங்கையில் ஈழப்போர் இன்னும் முடிவடையவில்லை என்றும், அடுத்தகட்டப் போர்
விரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் கூறினார். உலகத்தில் உள்ள அனைத்து
இலங்கைத் தமிழர்களும் அதில் பங்கேற்க இருப்பதாகவும், தமிழகத்தில்
உள்ளவர்களும் அதில் கலந்துகொள்ளத் தயாராக இருக்குமாறும் வைகோ வேண்டுகோள்
விடுத்தார். இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்து மரணமடைந்த
முத்துக்குமாரின் சிலையை தனியார் இடத்தில் நிறுவ போலீசார் அனுமதி
மறுத்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.