May 19 2010
அரசு உத்தேசித்த வெ ற்றிவிழா ரத்து
http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=7927#7927
இலங்கையில் பலத்த மழை : அரசு உத்தேசித்த வெற்றிவிழா ரத்து
கொழும்பு : இலங்கையில் நடைபெற்ற போரில் விடுதலைப்புலிகளை ஒடுக்கியதை
வெற்றிவிழாவாகக் கொண்டாடுவதற்கு கனமழை இடையூறாக உள்ளதால் நிகழ்ச்சி ரத்து
செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களை
அந்நாட்டு ராணுவம் கொன்று குவித்தது. இதனை உலகம் முழுவதும் உள்ள
தமிழர்கள் துக்கநாளாக அனுசரித்தனர். ஆனால், இதற்குப் போட்டியாக,
விடுதலைப்புலிகளை ஒடுக்கிய இந்த நாளை வெற்றிவிழாவாகக் கொண்டாட அந்நாட்டு
அரசு தீர்மானித்தது. மேலும், தமிழர்களைப்போல, போரில் உயிரிழந்த ராணுவ
வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக அனுசரிக்கவும் இலங்கை அரசு முடிவு
செய்தது. ஆனால் யாழ்ப்பாணம் அருகே 600 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம்
கொண்டிருப்பதால் இலங்கையில் மழை வெளுத்து வாங்குகிறது. கொழும்பில்
இருந்து அந்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் வெள்ளத்தில்
மிதப்பதால் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. கொழும்பு
முழுவதும் வெள்ளத்தில் மிதப்பதால் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கிப்
போயுள்ளது. எனவே, வெற்றி விழாவை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால்,
நிகழ்ச்சிகள் அனைத்தையும் அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. இலங்கைத்
தமிழர்களுக்கு ஆதரவாக இயற்கை இருக்கிறது என்பதே இதனைக் காட்டுவதாக உலகத்
தமிழர்களிடையே கருத்து நிலவுகிறது