May 19 2010

see this

Published by at 2:09 pm under மின்ன‌ஞ்ச‌ல்

முகப்பருவா? கவலையை விடுங்க!
வெயில் காலம் என்றால் எண்ணெய் பசைத்தோல் கொண்டவர்களுக்கு சோதனையான ஒரு
காலகட்டம். அவர்கள் என்னென்ன விதத்தில் கவனம் எடுத்துக் கொண்டால் தோலை
நன்றாக பராமரிக்க முடியும் என்பதை கூறுகிறேன்.

ஏற்கெனவே முகம் எண்ணெய்ப் பசைத் தன்மை உள்ளவர்களுக்கு வெயில் காலத்தில்
இன்னும் அதிகம் எண்ணெய் வழியும். காரணம் வெயிலின் சூடு அதிகரிக்க,
அதிகரிக்க எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக சுரக்க ஆரம்பித்துவிடுகிறது.

சோப்புக்கு பதில் முகத்தை சுத்தப்படுத்த தயிர் உபயோகிக்கலாம் என்று (பனி
சீஸனுக்காக) நாம் யோசித்திருந்தோம். ஆனால் இந்த வெயில் சீஸனில்
முகத்துக்கு எந்த காரணம் கொண்டும் தயிர் உபயோகிக்கக் கூடாது. காரணம்
தயிரில் எண்ணெய் தன்மை அதிகம். ஏற்கனவே எண்ணெய் வழியும் முகத்தில் தயிர்
தடவினால் இன்னும் அல்லவா மோசமாகப் போய்விடும்? தயிரின் ஆடையை
எடுத்துவிட்டு தண்ணீர் ஊற்றி மோராக்கிக் கொண்டு அதை வைத்து முகத்தை
சுத்தப்பத்தலாம். அல்லது பாலில் இரண்டு சொட்டு எலுமிச்சை ஜூஸ் விட்டும்
முகத்தை சுத்தப்படுத்தலாம். (தயிரோடு ஒப்பிட்டால் பாலில் எண்ணெய்ப் பிசு
பிசுப்புத் தன்மை கம்மி).

நேரம் கிடைக்கும்போது முகத்துக்கு கீழ்கண்ட ஃபேஸ்பேக் போடுவதும்
முகத்தின் அதிகப்படியான எண்ணெய்ப் பசையைக் குறைக்க உதவும்.

வெள்ளரிக்காயை கழுவிவிட்டு பொடிப்பொடியாக நன்றாக துருவிக் கொள்ளுங்கள்.
படுத்த நிலையில் அந்த துருவலை எடுத்து முகத்தில் புருவம் தவிர எல்லா
இடங்களிலும் வருமாறு பரப்பி வைத்தபடி 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே
படுத்திருங்கள். அப்புறம் முகம் கழுவிக் கொள்ளலாம்.

முகம் குளிர்ச்சியாக இருக்க உடம்பும் குளிர்ச்சியாக இருக்க வேண்டியது
அவசியம். அதனால் வெளிலில் கிளம்பும்முன் ஒரு டம்ளர் மோரோ, எலுமிச்சை
அல்லது தக்காளி ஜூஸோ குடித்துவிட்டுப் போங்கள். மேலே கூறிய ஃபேஸ்பேக்கில்
வெள்ளரிக்குப் பதில் தர்பூசணியைகூட உபயோகிக்கலாம் அல்லது தக்காளியை
வெட்டி அப்படியே முகத்தில் வைத்து நன்றாக மசாஜ் செய்துவிட்டு அது
காய்ந்தபின் கழுவிக் கொள்ளலாம். தக்காளியை முகத்தில் தேய்க்கும்போது ஒரு
விஷயத்தை கவனிக்கவேண்டும். பருக்கள் இருந்தால் எந்தக் காரணம் கொண்டும்
முகத்தை அழுத்தித் தேய்க்கக் கூடாது முகத்தில் பருக்கள் இன்னும்
நிறையத்தான் வரும்.

கல்லூரி படிக்கும் வயதில்தான் பருக்கள் அதிகமாக வருகின்றன. காரணம் அந்த
வயதில் எண்ணெய் பசை சுரப்பிகள் முழு வீச்சில் சுரப்பதுதான். தவிர அந்த
வயதில் ஏற்டும் ஹார்மோன் பிரச்சினைகளும் இதற்குக் காரணம்.

எப்படி பருக்களைச் சரிப்படுத்துவது?

இரவு சாப்பிட்டபின் புதினாவை அரைத்து பருக்கள் இருக்கும் இடங்களின் மேல்
மட்டும் தடவிக்கொள்ளுங்கள். இரவு அப்படியே தூங்கிவிடுங்கள். இப்படி
செய்வதால் பரு அமுங்கி அப்படியே காய்ந்து போய்விடும்(காய்ந்து
போய்விட்டதா என்று பருவைக் கிள்ளியெல்லாம் பார்ததுவிடாதீர்கள். எரித்து
சாம்பலாக்கிய பின்னால்கூட சாம்பலிந்து ஃபீனிக்ஸ் பறவை திரும்ப
உயிர்பெற்று வருமாம். அது மாதிரி பருக்களும் திரும்ப வந்து தொலைக்கும்)

முகப்பருவை நீக்க மஞ்சள், வேப்பிலை அரைத்து குளிப்பதற்கு அரைமணி முன்பு
முகத்தில் பூசலாம். சந்தனம், தேன் இரண்டையும் கலந்து குளிப்பதற்கு முன்
முகத்தில் பூசி ஒரு மணி நேரத்திற்கு பிறகு குளிக்கலாம். இதனால்
முகப்பருக்கள் நீங்கும்.

முகப்பரு உள்ளவர்கள் தினமும் எட்டு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். முகப்பரு உள்ளவர்கள் இனிப்பு
உண்பதை தவிர்க்க வேண்டும். தினமும் இரவு படுக்கைக்கு செல்லும்முன் இரண்டு
வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். சந்தன தைலத்தை முகப்பருவின் மேல்
தடவினால் முகப்பரு பழுத்து உடையும்.

முகப்பரு வராமலிருக்க கீழ்க்கண்ட முறைகளை பின்பற்ற வேண்டும்:
முகத்தில் பாலாடைகளை பூசிக்கொண்டு அரை மணிநேரம் கழித்து முகத்தை சுத்தமாக
கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இதுபோல் ஒரு மாதம் செய்து வந்தால் முகம்
பளபளப்பாகவும, புதுப்பொலிவுடனும் காணப்படும். முகப்பரு வருவதும்
தடுக்கப்படும்.

இளஞ்சூடாக உள்ள வெந்நீரில் முகத்தை கழுவ வேண்டும். பின் சுத்தமாக முகத்தை
துணியைக் கொண்டு துடைக்க வேண்டும்.பிறகு ஆலிவ் எண்ணெயை முகத்தில் பூசிக்
கொண்டு இரண்டொரு நிமிடம் நன்றாக ஊற வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில்
(ஐஸ் வாட்டராக இருந்தாலும் பரவாயில்லை) முகத்தை கழுவி துடைத்து விடவும்.
இப்படி தொடர்ந்து செய்தால் முகப்பரு வருவது தடுக்கப்படும்.

கசகசாவை எலுமிச்சம் பழச்சாறுவிட்டு மை போல அரைத்து அடிக்கடி முகப்பருவின்
மேல் தடவி வந்தால் பருக்கள் மறைந்து முகம் அழகு பெறும்.

No responses yet
Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.