May 20 2010
ஐ.நா.விசார ிக்க ஹிலாரி வலியுறுத்தல்
http://www.alaikal.com/news/?p=38623
இலங்கையின் போர்க் குற்றங்கள்: ஐ.நா.விசாரிக்க ஹிலாரி வலியுறுத்தல்
May 20, 2010
இலங்கையின் அனைத்து போர்க் குற்றங்கள் தொடர்பாகவும், ஐ.நா.சபை விசாரணை
நடத்த வேண்டும் என அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன்
வலியுறுத்தியுள்ளார்.
“த ஃபைனான்சியல் டைம்ஸ்” என்ற இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் இதனை
தெரிவித்துள்ள அவர், கடந்த 30 வருடங்களாக விடுதலைப்புலிகளுக்கும்
அரசாங்கத்துக்கும் இடையே நடைபெற்ற யுத்தத்தில், இரு தரப்பும் மேற்கொண்ட
போர்முறை குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்
என அதில் கூறியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர், அதன் காயங்கள் தொடர்ந்தும்
காணப்படுவதாகவும், இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வினை முன்வைப்பதன் மூலமே
அதனை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும் ஹிலாரி தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் எத்தனை ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்பதை
மறைத்து, தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்க இலங்கை அரசால் முடியலாம்.ஆனால்
அதன் மூலம் இலங்கை அரசாங்கத்தினால் சமாதானத்தை வெற்றி கொள்ள முடியுமா? என
ஹிலாரி கேள்வி எழுப்பியுள்ளார்