May 21 2010
இலங்கையில் இறுதிப்போர் தொடங்க ுவதற்கு முன்னரே அது முடிவடைந்ததாக கொழும்பு விமானநிலையத்தில் ராஜபக்ஷே மண்டியிட்டு மண் ணை முத்தமிட்டதாக அந்நாட்டு ராணுவ முன்னாள் த ளபதி சரத்பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.
http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=7975#7975
கொழும்பு : இலங்கையில் இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னரே அது
முடிவடைந்ததாக கொழும்பு விமானநிலையத்தில் ராஜபக்ஷே மண்டியிட்டு மண்ணை
முத்தமிட்டதாக அந்நாட்டு ராணுவ முன்னாள் தளபதி சரத்பொன்சேகா
குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கை போரின் போது, பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படக் கூடாது என்பதில்
ராணுவத்தினர் மிக உறுதியாக இருந்ததாக சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடையே நேற்று அவர் பேசினார்.
இதன்காரணமாக 3 லட்சம் மக்கள் காப்பாற்றப்பட்டதுடன், 10 ஆயிரம்
விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார். கடந்த ஆண்டு மே
மாதம் 18 ஆம் தேதி அதிகாலை இறுதிகட்டப் போர் தொடங்கப்பட்டு, 500 மீட்டர்
பரப்பளவிற்குள் மக்கள் முடக்கப்பட்டதாகவும், 19ஆம் தேதி காலையில் போர்
முடிவடைந்ததாகவும் பொன்சேகா தெரிவித்தார். இந்த தாக்குதலில் பிரபாகரன்
உட்பட 600 புலிகள் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார். ஆனால் 16ஆம் தேதி
அன்று கொழும்பு விமான நிலையத்தில் ராஜபக்ஷே மண்டியிட்டபோது,
இறுதிக்கட்டப் போர் தொடங்கவே இல்லை என்றும் பொன்சேகா தெரிவித்தார்.