இவற்றிற்கான களஞ்சியம் 'மின்ன‌ஞ்ச‌ல்' வகை

May 21 2010

விஜய் குறித்து நாளை தியேட்டர் உரிமையாளர ்கள் முக்கிய முடிவை எடுக்கவள்ளனராம். இதனால் கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Quantcast
http://thatstamil.oneindia.in/movies/gossip/2010/05/21-vijay-sura-vettaikaran-loss-theatre-owners.html

தொடர் பிளாப் படங்களால் பெரும் நஷ்டம்- விஜய் [^] குறித்து நாளை
தியேட்டர் உரிமையாளர்கள் முக்கிய முடிவு

விஜய் படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவுவதோடு பெரும் நஷ்டத்தையும்
ஏற்படுத்தி வருவதால் நடிகர் [^] விஜய் குறித்து நாளை தியேட்டர்
உரிமையாளர்கள் முக்கிய முடிவை எடுக்கவள்ளனராம். இதனால் கோலிவுட்டில்
சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் விஜய் நடித்து ஆதி, போக்கிரி, அழகிய தமிழ் மகன்,
குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.

இதில் போக்கிரி மெகா ஹிட். ஆனால் மற்ற படங்கள் வணிக ரீதியாக பெரும்
நஷ்டத்தை ஏற்படுத்தியவையாக விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள்
தரப்பில் கூறப்படுகின்றன.

தொடர்ந்து விஜய் படங்கள் தோல்வியைத் ஒவ்வொரு முறை விஜய் படம்
தோல்வியுறும்போதும், நஷ்டத்தை சந்திப்பவர்கள் தியேட்டர்
உரிமையாளர்கள்தான். விநியோகஸ்தர்களை விட இவர்களுக்குத்தான் பெரும்
பாதிப்பு ஏற்படுகிறதாம்.

இந்த நஷ்டக் கணக்கை விஜய் தரப்பிடம் கூறும்போதெல்லாம் அடுத்த படத்தில்
சமாளித்து விடலாம் என்று ஆறுதல் கூறப்படுமாம். ஆனால் வருகிற அத்தனை
படங்களும் தோல்விப் படமாகவே இருப்பதால் தியேட்டர் உரிமையாளர்கள்
கொதிப்படைந்துள்ளனர்.

வில்லு, வேட்டைக்காரன், சுறா என தொடர்ந்து மூன்று படங்களும் பெரும்
தோல்விப் படங்களாக தியேட்டர் உரிமையாளர்களால் கூறப்படுகின்றன. இதனால்
பெரும் நஷ்டத்தை அவர்கள் சந்தித்துள்ளனராம்.

இதையடுத்து சில முடிவுகளுக்கு அவர்கள் வரவுள்ளனராம். இதுகுறித்து நாளை
சென்னையில் கூடி ஆலோசித்து முடிவை அறிவிக்கவுள்ளனராம்.

அவர்கள் தற்போது எடுத்துள்ள முடிவுளாக கூறப்படுபவை என்னவென்றால்,
நஷ்டங்களை சரிக்கட்டும் வகையில் ஒரு படத்தை நடித்துத் தர வேண்டும்.
இல்லாவிட்டால் தியேட்டர் உரிமையாளர்களுக்காக ஒரு படத்தில் விஜய் நடிக்க
வேண்டும்.

தியேட்டர் உரிமையாளர்களுக்கு நிவாரணம் தரும் வகையில் விஜய் நடந்து
கொள்ளாவிட்டால் அவருக்கு ரெட் கார்ட் போடுவது, அவரது படங்களைத்
திரையிடுவதில்லை என்ற முடிவுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் வந்துள்ளனராம்.

தொடர்ந்து ஒரே மாதிரியாக நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். அவரது ஒரே
மாதிரியான நடிப்பு அவரது ரசிகர்களையே சலிப்படைய வைத்துள்ளது. இந்த
நிலையில் பெரும் பணத்தை செலவழித்து தியேட்டருக்கு வந்து பார்க்க மக்கள்
[^] எப்படி முன் வருவார்கள். எனவே விஜய் தனது பாணியை மாற்றிக் கொண்டால்
மட்டுமே இனி அவரது படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும்,
மற்றவர்களின் நஷ்டமும் முடிவுக்கு வரும் என தியேட்டர் உரி்மையாளர்கள்
சிலர் கூறுகின்றனர்.

தியேட்டர் அதிபர்களின் இந்த நடவடிக்கையால் திரையுலகில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது

No responses yet

May 21 2010

இலங்கையில் இறுதிப்போர் தொடங்க ுவதற்கு முன்னரே அது முடிவடைந்ததாக கொழும்பு விமானநிலையத்தில் ராஜபக்ஷே மண்டியிட்டு மண் ணை முத்தமிட்டதாக அந்நாட்டு ராணுவ முன்னாள் த ளபதி சரத்பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.

http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=7975#7975

கொழும்பு : இலங்கையில் இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னரே அது
முடிவடைந்ததாக கொழும்பு விமானநிலையத்தில் ராஜபக்ஷே மண்டியிட்டு மண்ணை
முத்தமிட்டதாக அந்நாட்டு ராணுவ முன்னாள் தளபதி சரத்பொன்சேகா
குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கை போரின் போது, பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படக் கூடாது என்பதில்
ராணுவத்தினர் மிக உறுதியாக இருந்ததாக சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடையே நேற்று அவர் பேசினார்.
இதன்காரணமாக 3 லட்சம் மக்கள் காப்பாற்றப்பட்டதுடன், 10 ஆயிரம்
விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார். கடந்த ஆண்டு மே
மாதம் 18 ஆம் தேதி அதிகாலை இறுதிகட்டப் போர் தொடங்கப்பட்டு, 500 மீட்டர்
பரப்பளவிற்குள் மக்கள் முடக்கப்பட்டதாகவும், 19ஆம் தேதி காலையில் போர்
முடிவடைந்ததாகவும் பொன்சேகா தெரிவித்தார். இந்த தாக்குதலில் பிரபாகரன்
உட்பட 600 புலிகள் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார். ஆனால் 16ஆம் தேதி
அன்று கொழும்பு விமான நிலையத்தில் ராஜபக்ஷே மண்டியிட்டபோது,
இறுதிக்கட்டப் போர் தொடங்கவே இல்லை என்றும் பொன்சேகா தெரிவித்தார்.

No responses yet

May 20 2010

ஐ.நா.விசார ிக்க ஹிலாரி வலியுறுத்தல்

http://www.alaikal.com/news/?p=38623

இலங்கையின் போர்க் குற்றங்கள்: ஐ.நா.விசாரிக்க ஹிலாரி வலியுறுத்தல்

May 20, 2010

இலங்கையின் அனைத்து போர்க் குற்றங்கள் தொடர்பாகவும், ஐ.நா.சபை விசாரணை
நடத்த வேண்டும் என அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன்
வலியுறுத்தியுள்ளார்.

“த ஃபைனான்சியல் டைம்ஸ்” என்ற இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் இதனை
தெரிவித்துள்ள அவர், கடந்த 30 வருடங்களாக விடுதலைப்புலிகளுக்கும்
அரசாங்கத்துக்கும் இடையே நடைபெற்ற யுத்தத்தில், இரு தரப்பும் மேற்கொண்ட
போர்முறை குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்
என அதில் கூறியுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர், அதன் காயங்கள் தொடர்ந்தும்
காணப்படுவதாகவும், இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வினை முன்வைப்பதன் மூலமே
அதனை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும் ஹிலாரி தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் எத்தனை ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்பதை
மறைத்து, தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்க இலங்கை அரசால் முடியலாம்.ஆனால்
அதன் மூலம் இலங்கை அரசாங்கத்தினால் சமாதானத்தை வெற்றி கொள்ள முடியுமா? என
ஹிலாரி கேள்வி எழுப்பியுள்ளார்

No responses yet

May 20 2010

தமிழினப் படுகொலைக்கு ஐ.நா. உடந்தையா? லூயிஸ ் ஆர்பர் கேள்வி

http://www.alaikal.com/news/?p=38625

தமிழினப் படுகொலைக்கு ஐ.நா. உடந்தையா? லூயிஸ் ஆர்பர் கேள்வி

May 20, 2010

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிகட்டத்தில் பல்லாயிரக்கணக்கில்
அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் பல
வெளியாகியும், எந்த விசாரணையும் நடத்தாமல் ஐ.நா. சாதிக்கும் மெளனம்,
அந்தப் படுகொலையில் அதற்கும் பங்கிருக்குமோ என்ற ஐயத்தை எழுப்புகிறது
என்று சர்வதேச சிக்கல் தீர்ப்புக் குழுவின் தலைவர் லூயிஸ் ஆர்பர்
கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழினத்திற்கு எதிராக போரின் இறுதி கட்டத்தில் நடந்த
படுகொலைக்கு சிறிலங்க இராணுவத்தின் தலைமையிடமிருந்தே உத்தரவு வந்தது என்ற
ஆதாரம் சானல் 4 தொலைக்காட்சியில் வெளியாகியுள்ள நிலையில், உலகை உலுக்கிய
அந்தப் படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த ஐ.நா. பொதுச் செயலர்
உத்தரவிடாதது ஏன் என்று லூயிஸ் ஆர்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமை அமைப்பின் ஆணையராகவும், அதன் பிறகு பன்னாட்டு
குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை குற்றச்சாற்று வழக்கறிஞராகவும்
பணியாற்றியுள்ள லூயிஸ் ஆர்பர், போராளிகளையும், சாதாரண மக்களையும்
பிரித்துபார்க்க மறுத்து தாக்குதல் நடத்தி, பெரும் அளவிற்கு மக்களைக்
கொன்று குவித்த சிறிலங்க அரசின் நடவடிக்கை பன்னாட்டு மனித உரிமை
பிரகடனத்திற்கு விழுந்த பெரிய அடியாகும் என்று கூறியுள்ளார்.

இலங்கைப் போரில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான
பன்னாட்டுக் குழுவைக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்று அம்னஸ்டி, மனித
உரிமை கண்காணிப்பகம் ஆகியவற்றுடன் இணைந்து லூயிஸ் ஆர்பரும் ஐ.நா.வை
நோக்கி குரலெழுப்பியுள்ளார்.

ஊஐகஉஇலங்கைப் போரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு யார் பொறுப்பு என்பது
குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சிறிலங்க அதிபர் ராஜபக்சவை ஐ.நா.
பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக்கொண்டார். ஆனால், அப்படிபட்ட
விசாரணைக்கு உத்தரவிடாத மகிந்த ராஜபக்ச, “போரில் இருந்து கற்க வேண்டிய
பாடங்கள்” என்ன என்பதை அறிந்து கூறுமாறு, 8 பேர் கொண்ட குழுவை
நியமித்துள்ளார். ஆனால் தங்களுக்கு போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை
நடத்தும் அதிகாரம் அளிக்கப்படவில்லை என்று அக்குழுவின் உறுப்பினர் ஒருவர்
கூறியுள்ளார்.

அதிபர் ராஜபக்சவின் இந்த நடவடிக்கையை குறித்த சானல் 4 தொலைக்காட்சிக்கு
அளித்த பேட்டியில் கருத்து தெரிவித்த லூயிஸ் ஆர்பர், “சிறிலங்க அரசின்
கடந்த கால நடவடிக்கைகளை அறிந்த எவரும், போர்க் குற்றங்களுக்கு
பொறுப்பானவர்கள் யார் என்பதை அந்த அரசு கண்டுபிடிக்கும் என்பதை
நம்பமாட்டார்கள். போர் முடிந்தவுடன் சிறிலங்க அரசுக்கு பாராட்டுத்
தெரிவித்த ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவை, போர்க் குற்றம் குறித்து
விசாரிக்கும் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

இலங்கைப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் மீது தாங்கள் இரகசியமாக
சேகரித்த ஆதாரங்களின் அடிப்படையில் 54 பக்கங்கள் கொண்ட அறிக்கையை
வெளியிட்டுள்ள பன்னாட்டு சிக்கல் தீ்ர்வுக் குழு, இலங்கைப் போரில்
ஐ.நா.வின் நடத்தை குறித்து அது தன்னைத் தானே விசாரித்தறிய வேண்டிய
அவசியம் உள்ளது என்று கூறியுள்ள லூயிஸ் ஆர்பர், “இலங்கைப் போர் குறித்து
ஐ.நா. கடைபிடித்து வரும் மெளனம், அது ராஜபக்ச அரசுடன் இணைந்து
செயல்பட்டதோ என்று ஐயப்பட வைக்கிறது” என்று கூறியுள்ளார்

No responses yet

May 20 2010

ஈழத்தில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தின்போது அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் [^] மிருகத்தனமாக கொன்று குவித்ததாக சர ்வதேச பிரச்சனைகளுக்கான குழுமம் என்ற அமெரிக ்க மனித உரிமை அமைப்பு குற்றம் [^] சாட்டியுள்ள து.

http://thatstamil.oneindia.in/news/2010/05/18/inoocent-tamils-were-murderd-lanka.html
)

வாஷிங்டன்: ஈழத்தில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தின்போது அப்பாவித்
தமிழர்களை இலங்கை ராணுவம் [^] மிருகத்தனமாக கொன்று குவித்ததாக சர்வதேச
பிரச்சனைகளுக்கான குழுமம் என்ற அமெரிக்க மனித உரிமை அமைப்பு குற்றம் [^]
சாட்டியுள்ளது.

பாதுகாப்பு மண்டலங்களை உருவாக்கி, அங்கு அப்பாவி தமிழர்களை இலங்கை
ராணுவம் போகச் சொன்னது. பின்னர் அங்கு வந்து குவிந்த அப்பாவி மக்களை
குண்டுகளை வீசி குவியல் குவியலாக கொன்று குவித்தது.

இத்தாக்குதல் பற்றி உயர் அதிகாரிகளுக்கு தெரிந்த போதிலும், அவர்கள் அதைத்
தடுக்கவில்லை. இந்த விதிமீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த
வேண்டும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முத்துக்குமார் பாசறை
இன்று தொடங்கப்படுகிறது. இதேபோல முத்துக்குமார் குறித்து திருமாவளவன் [^]
எழுதிய பாடலையும் இன்று அக்கட்சி வெளியிடுகிறது

No responses yet

Next »

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.