இவற்றிற்கான களஞ்சியம் 'மின்ன‌ஞ்ச‌ல்' வகை

May 20 2010

http://thatstamil.oneindia.in/news/2010/05/18/srilanka-tamils-refugees-army-killings-rape.html

இளைஞர்களைக் கொல்கிறார்கள், பெண்களைக் கற்பழிக்கிறார்கள்-கொல்லத்தில்
சிக்கிய தமிழர் பேட்டி
செவ்வாய்க்கிழமை, மே 18, 2010, 12:36[IST]

கொல்லம்: இலங்கை [^]யில் எங்களால் இனி வாழவே முடியாது. தமிழ் இளைஞர்களை
ஒருவர் விடாமல் பிடித்துக் கொண்டு போய் கொல்கிறார்கள். இளம் பெண்களை
கற்பழிக்கிறார்கள். இதனால்தான் அங்கிருந்து தமிழர்கள் [^] பெருமளவில்
வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் இலங்கையிலிருந்து
இந்தியா [^] வழியாக வெளிநாடு செல்ல முயன்று பிடிபட்ட தமிழர்களில் ஒருவரான
செல்வா என்பவர்.

கொல்லத்தில் இந்தத் தமிழர்கள் சிறைவைக்கப்பட்டிருந்தபோது கேரளாவின் கைரளி
தொலைக்காட்சி சேனல்,செல்வா என்ற தமிழரிடம் பேட்டி கண்டுள்ளது.

அதில் செல்வா கூறுகையில், ராணுவத்திடம் துப்பாக்கி உள்ளது. கண்களில் பட்ட
தமிழர்களையெல்லாம் சுடுகிறான்.

அங்கு தமிழர்களால் வாழவே முடியாது. எங்களுக்கு இனிவாழ்க்கை இல்லை.
இளைஞர்களை சுட்டுக்கொல்கிறார்கள்,பெண்களைக் கற்பழித்து சீரழிக்கிறார்கள்.

இதனால்தான் உயிரைப் பணயம் வைத்து படகுகள் மூலமாகவும், பிற வழிகளிலும்
நாங்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக போய்க் கொண்டிருக்கிறோம். எங்களால்
இனி நிம்மதியாக அங்கு வாழ முடியாது என்றார் செல்வா.

No responses yet

May 20 2010

உடலுறுப்புகளை இழந்த லட்சக்கணக்கான தமிழர ்களின் வாழ்க்கை முடங்கிப் போயுள்ளதாகவும், அ வர்களின் எதிர்காலம் நிர்மூலமாகி இருப்பதாக வும் அமெரிக்க

http://thatstamil.oneindia.in/news/2010/03/14/sl-tamils-hold-nothing-cnn-s-shock.html

கொழும்பு: இலங்கை [^] போரினால் கை, கால் மற்றும் உடலுறுப்புகளை இழந்த
லட்சக்கணக்கான தமிழர்களின் வாழ்க்கை முடங்கிப் போயுள்ளதாகவும், அவர்களின்
எதிர்காலம் நிர்மூலமாகி இருப்பதாகவும் அமெரிக்க செய்தி நிறுவனமான
சிஎன்என் தெரிவிக்கிறது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கு இடையே கடந்த
ஆண்டு நடந்த போரின் போது லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கை,
கால்களை இழந்தும் கொடூரமான காயங்கள் பட்டும் அவதிப்பட்டனர்.

போரின்போது தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறிய 2 லட்சத்து 80
ஆயிரம் மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

அவர்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் பலர்
போரின்போது சண்டைக்கு நடுவில் சிக்கி கை, கால், மற்றும் உடல் உறுப்புகளை
இழந்தவர்கள்.

அவர்களுக்கு அரசு தரப்பில் உதவி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால்
உடல் உறுப்புகளை இழந்து விட்ட நிலையில் வாழ்க்கையே முடிந்துவிட்ட
விரக்தியுடன் அவர்கள் இருந்து வருகின்றனர்.

அமெரிக்க செய்தி நிறுவனமான சிஎன்என் பாதிக்கப்பட்ட மக்களை நேரில்
சந்தித்து செய்தி ஒளிபரப்பியுள்ளது. கை, கால்களை இழந்த மக்கள் இப்போது
வாழ முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகி இருப்பதாக அச்செய்தி
தெரிவிக்கிறது.

பாதிக்கப்பட்ட ரவீந்திரன் (21) என்பவர் அளித்த பேட்டியில்,

‘போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் உயிர்
பிழைப்பதற்காக பல மாதங்களாக ஒவ்வொரு பதுங்கு குழியாக சென்று மறைந்து
வாழ்ந்தோம்.

இறுதி கட்ட போரின்போது அதிக அளவில் குண்டு வீச்சு நடந்தது. நான் ஓடிப்
போய் ஒரு பதுங்கு குழிக்குள் நுழைந்தேன். அதன் மீதே ஒரு குண்டு வந்து
விழுந்தது.

இதில் என் உறவினர் உயிர் இழந்தார். எனது 2 கால்களும் துண்டாகி விட்டன.
ஒரு கண்ணையும் இழந்தேன். இப்போது ஊருக்கு திரும்பி இருக்கிறேன்.
கால்களும், கண்ணும் இல்லாத நான் எப்படி வாழப் போகிறேன் என்பதே
தெரியவில்லை. எனது வாழ்க்கை முடிந்துபோய் விட்டது’ என்று கூறியுள்ளார்.

இவர் ஒரு உதாரணம் தான். இவரைப் போல லட்சக்கணக்கான தமிழ் மக்கள்,
வாழ்க்கையை தொலைத்துவிட்டு உயிரை மட்டும் சுமந்துகொண்டு வெற்றுடலாக
கிடக்கிறார்கள் என்று சிஎன்என் தெரிவித்துள்ளது.

No responses yet

May 19 2010

அரசு உத்தேசித்த வெ ற்றிவிழா ரத்து

http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=7927#7927

இலங்கையில் பலத்த மழை : அரசு உத்தேசித்த வெற்றிவிழா ரத்து
கொழும்பு : இலங்கையில் நடைபெற்ற போரில் விடுதலைப்புலிகளை ஒடுக்கியதை
வெற்றிவிழாவாகக் கொண்டாடுவதற்கு கனமழை இடையூறாக உள்ளதால் நிகழ்ச்சி ரத்து
செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களை
அந்நாட்டு ராணுவம் கொன்று குவித்தது. இதனை உலகம் முழுவதும் உள்ள
தமிழர்கள் துக்கநாளாக அனுசரித்தனர். ஆனால், இதற்குப் போட்டியாக,
விடுதலைப்புலிகளை ஒடுக்கிய இந்த நாளை வெற்றிவிழாவாகக் கொண்டாட அந்நாட்டு
அரசு தீர்மானித்தது. மேலும், தமிழர்களைப்போல, போரில் உயிரிழந்த ராணுவ
வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக அனுசரிக்கவும் இலங்கை அரசு முடிவு
செய்தது. ஆனால் யாழ்ப்பாணம் அருகே 600 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம்
கொண்டிருப்பதால் இலங்கையில் மழை வெளுத்து வாங்குகிறது. கொழும்பில்
இருந்து அந்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் வெள்ளத்தில்
மிதப்பதால் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. கொழும்பு
முழுவதும் வெள்ளத்தில் மிதப்பதால் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கிப்
போயுள்ளது. எனவே, வெற்றி விழாவை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால்,
நிகழ்ச்சிகள் அனைத்தையும் அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. இலங்கைத்
தமிழர்களுக்கு ஆதரவாக இயற்கை இருக்கிறது என்பதே இதனைக் காட்டுவதாக உலகத்
தமிழர்களிடையே கருத்து நிலவுகிறது

No responses yet

May 19 2010

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்து க்கு தற்கொலைபடை தாக்குதல் மிரட்டல் விடுக்க ப்பட்டுள்ளதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்ப ு போடப்பட்டுள்ளது.

http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=7941#7941

சென்னை: சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு தற்கொலைபடை தாக்குதல்
மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தி வரும்
நிலையில், சென்னையின் முக்கிய இடங்களில் ஒன்றான சென்னை சென்டிரல் ரயில்
நிலையத்தை தற்கொலைபடையினர் எந்த நேரத்திலும் தாக்கலாம் என்ற மிரட்டல்
வந்துள்ளது. இதனையடுத்து அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தீவிர பரிசோதனைக்குப் பின்னர் பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுவதாகவும்,
ரெயில்வே பாதுகாப்பு படையினர் உள்பட மோப்ப நாய்களின் உதவியோடு தமிழக
போலீஸாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் அனைவரும் இதற்கு
சிறந்த முறையில் ஒத்துழைக்குமாறும், யாரும் பீதியடைய தேவையில்லை என்றும்
ரெயில்வே பாதுகாப்பு படையின் தலைமை பாதுகாப்பு கமிஷனர் கூறினார். மேலும்,
ரெயில்கள், நடைமேடைகள், ஓய்வு அறைகள் உள்பட ரயில் நிலையத்தின் அனைத்து
பகுதிகளிலும் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

No responses yet

May 19 2010

see this

முகப்பருவா? கவலையை விடுங்க!
வெயில் காலம் என்றால் எண்ணெய் பசைத்தோல் கொண்டவர்களுக்கு சோதனையான ஒரு
காலகட்டம். அவர்கள் என்னென்ன விதத்தில் கவனம் எடுத்துக் கொண்டால் தோலை
நன்றாக பராமரிக்க முடியும் என்பதை கூறுகிறேன்.

ஏற்கெனவே முகம் எண்ணெய்ப் பசைத் தன்மை உள்ளவர்களுக்கு வெயில் காலத்தில்
இன்னும் அதிகம் எண்ணெய் வழியும். காரணம் வெயிலின் சூடு அதிகரிக்க,
அதிகரிக்க எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக சுரக்க ஆரம்பித்துவிடுகிறது.

சோப்புக்கு பதில் முகத்தை சுத்தப்படுத்த தயிர் உபயோகிக்கலாம் என்று (பனி
சீஸனுக்காக) நாம் யோசித்திருந்தோம். ஆனால் இந்த வெயில் சீஸனில்
முகத்துக்கு எந்த காரணம் கொண்டும் தயிர் உபயோகிக்கக் கூடாது. காரணம்
தயிரில் எண்ணெய் தன்மை அதிகம். ஏற்கனவே எண்ணெய் வழியும் முகத்தில் தயிர்
தடவினால் இன்னும் அல்லவா மோசமாகப் போய்விடும்? தயிரின் ஆடையை
எடுத்துவிட்டு தண்ணீர் ஊற்றி மோராக்கிக் கொண்டு அதை வைத்து முகத்தை
சுத்தப்பத்தலாம். அல்லது பாலில் இரண்டு சொட்டு எலுமிச்சை ஜூஸ் விட்டும்
முகத்தை சுத்தப்படுத்தலாம். (தயிரோடு ஒப்பிட்டால் பாலில் எண்ணெய்ப் பிசு
பிசுப்புத் தன்மை கம்மி).

நேரம் கிடைக்கும்போது முகத்துக்கு கீழ்கண்ட ஃபேஸ்பேக் போடுவதும்
முகத்தின் அதிகப்படியான எண்ணெய்ப் பசையைக் குறைக்க உதவும்.

வெள்ளரிக்காயை கழுவிவிட்டு பொடிப்பொடியாக நன்றாக துருவிக் கொள்ளுங்கள்.
படுத்த நிலையில் அந்த துருவலை எடுத்து முகத்தில் புருவம் தவிர எல்லா
இடங்களிலும் வருமாறு பரப்பி வைத்தபடி 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே
படுத்திருங்கள். அப்புறம் முகம் கழுவிக் கொள்ளலாம்.

முகம் குளிர்ச்சியாக இருக்க உடம்பும் குளிர்ச்சியாக இருக்க வேண்டியது
அவசியம். அதனால் வெளிலில் கிளம்பும்முன் ஒரு டம்ளர் மோரோ, எலுமிச்சை
அல்லது தக்காளி ஜூஸோ குடித்துவிட்டுப் போங்கள். மேலே கூறிய ஃபேஸ்பேக்கில்
வெள்ளரிக்குப் பதில் தர்பூசணியைகூட உபயோகிக்கலாம் அல்லது தக்காளியை
வெட்டி அப்படியே முகத்தில் வைத்து நன்றாக மசாஜ் செய்துவிட்டு அது
காய்ந்தபின் கழுவிக் கொள்ளலாம். தக்காளியை முகத்தில் தேய்க்கும்போது ஒரு
விஷயத்தை கவனிக்கவேண்டும். பருக்கள் இருந்தால் எந்தக் காரணம் கொண்டும்
முகத்தை அழுத்தித் தேய்க்கக் கூடாது முகத்தில் பருக்கள் இன்னும்
நிறையத்தான் வரும்.

கல்லூரி படிக்கும் வயதில்தான் பருக்கள் அதிகமாக வருகின்றன. காரணம் அந்த
வயதில் எண்ணெய் பசை சுரப்பிகள் முழு வீச்சில் சுரப்பதுதான். தவிர அந்த
வயதில் ஏற்டும் ஹார்மோன் பிரச்சினைகளும் இதற்குக் காரணம்.

எப்படி பருக்களைச் சரிப்படுத்துவது?

இரவு சாப்பிட்டபின் புதினாவை அரைத்து பருக்கள் இருக்கும் இடங்களின் மேல்
மட்டும் தடவிக்கொள்ளுங்கள். இரவு அப்படியே தூங்கிவிடுங்கள். இப்படி
செய்வதால் பரு அமுங்கி அப்படியே காய்ந்து போய்விடும்(காய்ந்து
போய்விட்டதா என்று பருவைக் கிள்ளியெல்லாம் பார்ததுவிடாதீர்கள். எரித்து
சாம்பலாக்கிய பின்னால்கூட சாம்பலிந்து ஃபீனிக்ஸ் பறவை திரும்ப
உயிர்பெற்று வருமாம். அது மாதிரி பருக்களும் திரும்ப வந்து தொலைக்கும்)

முகப்பருவை நீக்க மஞ்சள், வேப்பிலை அரைத்து குளிப்பதற்கு அரைமணி முன்பு
முகத்தில் பூசலாம். சந்தனம், தேன் இரண்டையும் கலந்து குளிப்பதற்கு முன்
முகத்தில் பூசி ஒரு மணி நேரத்திற்கு பிறகு குளிக்கலாம். இதனால்
முகப்பருக்கள் நீங்கும்.

முகப்பரு உள்ளவர்கள் தினமும் எட்டு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். முகப்பரு உள்ளவர்கள் இனிப்பு
உண்பதை தவிர்க்க வேண்டும். தினமும் இரவு படுக்கைக்கு செல்லும்முன் இரண்டு
வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். சந்தன தைலத்தை முகப்பருவின் மேல்
தடவினால் முகப்பரு பழுத்து உடையும்.

முகப்பரு வராமலிருக்க கீழ்க்கண்ட முறைகளை பின்பற்ற வேண்டும்:
முகத்தில் பாலாடைகளை பூசிக்கொண்டு அரை மணிநேரம் கழித்து முகத்தை சுத்தமாக
கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இதுபோல் ஒரு மாதம் செய்து வந்தால் முகம்
பளபளப்பாகவும, புதுப்பொலிவுடனும் காணப்படும். முகப்பரு வருவதும்
தடுக்கப்படும்.

இளஞ்சூடாக உள்ள வெந்நீரில் முகத்தை கழுவ வேண்டும். பின் சுத்தமாக முகத்தை
துணியைக் கொண்டு துடைக்க வேண்டும்.பிறகு ஆலிவ் எண்ணெயை முகத்தில் பூசிக்
கொண்டு இரண்டொரு நிமிடம் நன்றாக ஊற வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில்
(ஐஸ் வாட்டராக இருந்தாலும் பரவாயில்லை) முகத்தை கழுவி துடைத்து விடவும்.
இப்படி தொடர்ந்து செய்தால் முகப்பரு வருவது தடுக்கப்படும்.

கசகசாவை எலுமிச்சம் பழச்சாறுவிட்டு மை போல அரைத்து அடிக்கடி முகப்பருவின்
மேல் தடவி வந்தால் பருக்கள் மறைந்து முகம் அழகு பெறும்.

No responses yet

« Prev - Next »

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.