இவற்றிற்கான களஞ்சியம் 'Assassination' வகை

Jul 31 2006

மகாத்மாவும் கொலை முயற்சிகளும்…

Published by under Assassination

மகாத்மா தனது வாழ்நாளில் குறைந்தது பத்து முறை கொலை முயற்சியில் இருந்து தப்பினார் என்பது நம்மில் எத்தனை பேர் அறிந்தது. பத்து முயற்சிகளில் ஆறு மட்டுமே ஆவணப்படுத்தப் பட்டுள்ளது….

1.1934 ஆம் ஆண்டு பூனா நகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பில், காந்தியடிகள் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாய் வெடிகுண்டு காரின் முன்னால் விழுந்ததால் உயிர் தப்பினார். இதில் நகராட்சி அதிகாரியும் இரண்டு போலீஸ் அதிகாரிகளும் மேலும் நாலு பேரும் படுகாயமடைந்தனர்.

2.1944 ஆம் ஆண்டு பஞ்சக்னி என்ற இடத்தில் காந்தியடிகளை நோக்கி கையில் கத்தியுடன் கொலைவெறியுடன் ஒரு இளைஞன் ஓடிவந்தான், வந்தது வேறு யாருமல்ல…நாதுராம் விநாயக் கோட்சேதான், இதை பூனாவிலுல்ல ‘காரத்தி லாட்ஜ்’ என்ற விடுதியின் உரிமையாளர் மணி சங்கர் புரோகித் பின்னர் உறுதி செய்திருக்கிறார். சதாரா மாவட்டத்தில் உள்ள மாவட்ட மத்திய வங்கியின் அப்போதைய தலவரான பி.டி.பிசாரே என்பவர் வழிமறித்து கத்தியை பிடுங்கியதால் காந்தி உயிர்தப்பினார்.

3.1944 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜின்னாவை சந்திக்க வார்தாவிலிருது பம்பாய்க்கு புறப்படுவதாக இருந்த சமயத்தில் மகாத்மாவின் செயலாலர் திரு.பியாரிலாலுக்கு மாவட்ட போலீஸ் அதிகாரியிடமிருந்து வந்த தொலை பேசி அழைப்பில், காந்தியை கொல்ல பூனாவிலிருந்து ஒரு தீவிரவாதக் குழு வார்தா வந்திருப்பதாகவும் காந்தி உயிருக்கு ஆபத்து என்றும் எச்சரித்தார். இதையறிந்த மகாத்மா அவர்களை சந்திக்க விரும்பினார்…மேலும் அவர்களை சந்தித்துவிட்டுதான் பம்பாய் கிளம்புவேன் என்றும் கூறினார். ஆனால் அதற்கிடையே போலீஸார் அந்த கும்பலை வளைத்துப் பிடித்தனர். அந்த குழுவில் இருந்த தாட்டே என்பவரிடம் நீளமான கத்தி இருந்தது. விசாரனையில் அது காந்தி செல்லும் காரின் டயரை சேதப்படுத்த வைத்திருந்தாக பொய் கூறியதாக பதிவாகியிருக்கிறது.

4.1946 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிறப்பு ரயிலொன்றின் மூலமாய் காந்தியடிகள் பூனா சென்று கொண்டிருந்தார். இரயில் நள்ளிரவில் ‘நேரல்’ மற்றும் ‘கர்ஜத்’ இரயில் நிலையங்களுக்கிடையே சென்று கொண்டிருந்த போது இரயிலை கவிழ்ப்பதற்காக தண்டவாளத்தின் மீது பெரிய பெரிய பாறாங்கற்கள் வைக்கப்பட்டிருந்தது. அதிர்ஷ்ட வசமாக இஞ்சின் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனால் ரயிலின் இஞ்சின் படுசேதம் அடைந்தது.

5.1948 ஆம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி டெல்லியில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் இந்து மத தீவிரவாதியான ‘மதன்லால் பாவா’ என்பவர் காந்தியடிகள் மீது வெடிகுண்டு வீசியதும் மயிரிழையில் குறிதவறிப் போய் வெடித்ததும் அனைவரும் அறிந்ததே. இந்தச் சூழ்நிலையிலும் பதட்டமின்றி பிரார்த்தனை கூட்டத்தை மகாத்மா நடத்தி முடித்தார்.

6. இதற்கு பத்து நாட்கள் கழித்து 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் கோட்சே கும்பலின் சதிக்கு மகாத்மா பலியானார்.இதற்கு 24 மணி நேரத்திற்கு முன் காந்தியடிகள் கூறிய கருத்துடன் இந்தப் பதிவினை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

“சில நாட்களுக்கு முன்பு நடந்த கொலைமுயற்சி போன்று பிரிதொரு முயற்சியில் என்னை யாரோனும் துப்பாக்கியின் தோட்டாவினால் சுட்டுக் கொன்றுவிடுவானாகில் அதை எவ்வித விறுப்பு வெறுப்பின்றி சந்திக்கவே விறும்புகிறேன். உதட்டில் கடவுளின் நாமத்தை கூறிக்கொண்டே எனது இறுதி மூச்சை விட விரும்புகிறேன். அப்போதுதான் நான் எம்மாதிரியான ஒரு வாழ்க்கை வாழ வேண்டுமென்று விரும்பியிருந்தேனோ அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தவன் என்ற தத்துவத்துக்கு உரியவனாவேன்.”

http://sadhayam.blogspot.com/2006/07/blog-post_30.html

_____
CAPital

No responses yet

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.