இவற்றிற்கான களஞ்சியம் 'Movie' வகை

Aug 07 2006

ஹிட்லரின் கடைசி நாட்கள்!

Published by under Movie,World Icon

u5.jpg
u.jpg
கடந்த நூறு நாட்களாக ஐரோப்பிய திரையரங்குகளில் அதிக வசூலைப் பெற்ற திரைப்படமாக பேசப்படுவது உன்ராக்கன் ( ஹிட்லரின் கடைசி நாட்கள் ) என்ற ஜேர்மனிய திரைப்படமாகும். டொச் மொழியைப் பேசினாலும் அனைவருக்கும் விளங்கக் கூடிய வாறு படத்தின் கதை நகர்ந்து செல்கிறது. இப்படத்தை சாதாரண திரைப்பட ரசிகர்கள் மட்டுமல்லாது பாடசாலைப் பிள்ளைகள், உயர் வகுப்பு மாணவரென பெருந் தொகையானோர் பார்த்துள்ளனர். டென்மார்க்கிற்கு வெறும் 18 பிரதிகளே தரப்பட்டதால் திரையரங்குகள் இப்படத்தை ஓடுவதற்காக பல மாதங்கள் தவம் கிடக்க வேண்டியும் நேர்ந்தது. இவ்வாரம் முதல் டிவிடியிலும் இப்படம் வெளிவந்துள்ளது.

படத்தின் சிறப்பம்சம்

இப்படம் இதுவரை வெளிவராத சில சம்பவங்களை உலகின் முன் வைத்துள்ளது. ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லர் தொடர்பாக எண்ணற்ற திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவைகள் ஹிட்லரின் இறுதி நாட்களை சரியான ஆதாரங்களுடன் வெளியிடவில்லை. ஆனால் இப்படம் தகுந்த ஆதாரங்களுடன் அந்தக் கடைசித் தினங்களை அணுவணுவாகத் தருகிறது. உண்மையில் நடந்ததை விவரிக்க ஹிட்லருடன் இருந்த பெண்மணி ஒருவர் பயன்படுத்தப்பட்டுள்ளார். இவர் படத்தில் நேரடியாகவே தோன்றி தகவல் தருகிறார். படம் வெளிவர முன்னர் இப் பெண்மணி இறந்துவிட்டாலும் இவருடைய குரலில் செய்யப்பட்ட பேட்டி உண்மையின் பிரதிபலிப்பாக இருக்கிறது.

படத்தின் மூலக்கதை
u1.jpg
ஜேர்மனியை ரஸ்யப்படைகளும், அமெரிக்கப்படைகளும், நேசநாடுகளின் படைகளும் நெருங்கிவிட்டன. பேர்ளினைச் சுற்றி சுமார் 200 மீட்டர் தொலைவுவரை எதிரிப்படைகளின் சுற்றிவளைப்பு ஆரம்பமாகிவிட்டது. நிலத்தடி அறையில் ஹிட்லரும் அவருடைய மனைவி ஈவாபுறு}ணும், பிள்ளைகள் குடும்பத்தினர், கொயபெல்ஸ் குடும்பம் உட்பட முக்கிய தளபதிகளும், அவர்களுடைய குடும்பத்தினரும், சிறு குழந்தைகளும் சிக்குண்டு கிடக்கிறார்கள். பேர்ளினின் நகர மையத்தில் உள்ள பங்கருக்குள் கதை நடக்கிறது. உலகத்தை ஆள விரும்பிய அந்த அதிகார மையம் இறுதி நேரத்தில் உண்மைகளை நம்ப முடியாமல் அலப்பாரித்து தற்கொலை மூலம் உலகிலிருந்து தப்பித்துக் கொள்ள முனைவது கதை. அந்த நிகழ்வில் இருந்து தப்பிப்போன ஒரு பெண்மணி தனது வாய் வழியாக அந்த பங்கருக்குள் நடைபெற்ற நிகழ்வுகளை படிப்படியாக விபரித்து செல்கிறாள். பலர் படையை விட்டு ஓடுகிறார்கள், சிலர் புதிதாக ஜேர்மனியைக் காப்பாற்றலாமா என்று நினைக்கிறார்கள். ரஸ்யப்படைகள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை பரிசோதிக்க வெளியே வந்த தளபதிகளை ரஸ்யர்கள் எந்த முன் யோசனையும் இல்லாமல் அதிலேயே து}க்கில் போட்டு கொல்கிறார்கள். சமாதானம் செய்தாலும் உயிர் தப்ப வழி எதுவுமற்ற நிலையில் ஹிட்லரும் குடும்பத்தினரும் பரிதாபகரமாக தற்கொலை செய்யும் நிகழ்வு கதையின் முடிவான மாறுகிறது.

படத்தில் ஹிட்லரின் கடைசி 12 நாட்களும் பேசப்பட்டாலும் கதையின் கருவின் கருவாக – கருமணியாக இருப்பது ஹிட்லர் குடும்பம் தமது வாரிசுகளை பாதுகாக்க முடியாமல் படும் வேதனைதான். அவர்களுக்கு ஆதரவான இத்தாலி, ஜப்பான் போன்றனவும் தோல்வியைத் தழுவிவிட்ட நிலையில் அவர்களுக்காக ஒரு வார்த்தை உதிர்க்க, ஆதரவுதர உலகில் யாருமே இல்லாமல்; போகிறது. அந்த நேரத்தில் அவர்களை என்ன செய்தாலும் உலகின் கண்களுக்கு அது மறைக்கப்பட்ட நாடகமாகவே போயிருக்கும். இதனால் தற்கொலையே ஒரேயொரு வழியாக அவர்களுக்கு எஞ்சுகிறது. இப்படி மனதைத் தொடும் பல நிகழ்வுகளின் தொகுப்பே இத்திரைக் கதை என்று கூறலாம்.

ஹிட்லரின் கடைசிநேர சிந்தனைகள்..

இன்று அமெரிக்காவில் வெள்ளை மாளிகை இருப்பதைவிட பெரிதாக ஜேர்மனியில் ஒரு வெள்ளை மாளிகையை அமைத்து உலகத்தை அதிலிருந்து ஆட்சி செய்ய அவன் விரும்புகிறான். நண்பர்கள் எதிரிகள் என்ற பேதமின்றி அனைவரையும் போரால் வெல்ல வேண்டியதுதான் ஒரே வழி. அந்த இலட்சியத்தில் பயணிப்போர்க்கு அதைவிட இன்னொரு வழி கிடையாது என்பது உண்மையாகிறது. அதற்காகவே நட்பு நாடான ரஸ்யாவுடனும் அவன் போரைத் தொடங்குகிறான். உலகம் முழுவதையும் தன் விரலின் நுனியில் வைத்து சுழற்ற வேண்டுமென்ற தனது ஆசை நிராசைiயாகப் போன கவலையை அவனுடைய ஒவ்வொரு நிமிடப் பேச்சுக்களும் உணர்த்துகின்றன.

உலகை ஆழ்வதற்கான நகரமைப்பு மாதிரி வடிவை அவன் நிலத்தடியில் செய்து வைத்திருக்கிறான். முழு உலகையும் ஆட்சி செய்யும் ஏற்பாடுகளையும் அவன் பூர்த்தியாக்கியிருந்தான். நிறைவேறாமல் போன தனது திட்டங்களின் மாதிரி வடிவங்களைப் பார்த்துப் பார்த்து அவன் படும் கவலை படத்தின் முக்கிய பகுதியாக உள்ளது. முதல் உலக யுத்தத்தால் வஞ்சிக்கப்பட்ட ஜேர்மனியின் வரலாற்று வடுவாக அவன் நிற்கிறான். அந்த வஞ்சத்தை, பழிக்குப் பழியை தீhக்க முடியாமல் போனதே அவனுடைய ஏக்கப் பெரு மூச்சாக உள்ளது.

எத்தகைய மாற்றுத் தீர்வுக்கும், தப்பிச் சென்று சரணடையும் யோசனைகளுக்கும் அவன் அடியோடு உடன்பட மறுத்துவிடுகிறான். பிடிவாதம் கடைசிவரை அவனை விட்டு நீங்காத ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் பல விடயங்களில் தான் விட்ட தவறுகளை அவன் தனக்குள்ளேயே பலமாகப் பேசிக் கொள்கிறான். உலகத்தின் சிறந்த அறிவாளிகளான யூதர்களை அழிக்காமல் உலகின் ஒட்டுமொத்த அதிகாரத்தை உருவாக்க முடியாது என்று அவன் கருதியதை வெளிப்படையாகக் கூறுகிறான். ஆனால் போரின் பிரதான இரிசு தோல்விப்பக்கமாக திரும்பியபோது போரை நிறுத்தி சமாதானத்தை ஆரம்பிக்காமல் விட்டது தன்னுடைய தவறு என்பதை அவன் பல தடவைகள் பேசிக் கவலைப்படுகிறான்.

ஆடம்பரத்தினதும், மரியாதையினதும் உச்சியில் வாழ்ந்த அவன் இறுதியில் நிலத்தடிச் சுரங்கத்தில் வாழ வேண்டிய நிலை உருவாகிறது. மறைவிடத்தில் படிப்படியாகக் குறைந்து போகும் வசதிகள், உணவுப் பொருட்களின் போதாமை போன்றன புதிய பிரச்சனைகளாக மாறுகின்றன. டீசல் முடிந்து நிலத்தடி அறையை ஒளிப்படுத்த முடியாத நிலை உருவாகிறது. பட்டினி மரணமும் அவர்களை அச்சுறுத்த ஆரம்பிக்கிறது. உலகை ஆட்சி செய்வதைவிட ஒரு நேர உணவு பாரிய பிரச்சனை என்ற உண்மை அவர்களுடைய மூளையை இடிக்கிறது. தாமாக மரணிக்காவிட்டால் பட்டினியும், அந்த இருள் சுரங்கமுமே அவர்களை அழித்துவிடக்கூடிய அபாயம் மரணத்தின் கொடுமையாக நெருங்குகிறது. அதைச் சந்திக்க முன்னர் அனைவரும் படிப்படியாக மரணிக்க முடிவு செய்கின்றனர்.

தமது குடும்பங்களை அழிக்கும் தளபதிகள்.

u3.jpg

பிள்ளைகள் மனைவி சகிதம் ஆடம்பரமாக வாழ்ந்த தளபதிகள் தமது குடும்பங்களை எவ்வாறாயினும் அழித்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர். ஒவ்வொன்றாக காரியங்கள் நடைபெறுகின்றன. ஒரு தளபதி சாப்பாட்டு மேசையில் குடும்பத்தினருடன் அன்பாக உரையாடிக் கொண்டே இரண்டு கிரனைட்டுக்களை மேசையின் கீழ் வெடிக்க வைத்து குடும்பத்தோடு மடிகிறார்.

குடும்பங்கள் அற்றவர்கள் ஒரே நேரத்தில் இருவர் தத்தமது தலைகளுக்கு நேராக துப்பாக்கியை நீட்டியபடி ஒருவரை ஒருவர் சுட்டு மரணிக்கிறார்கள். இப்படி தொடர்ந்து வெடிச்சத்தங்கள். இந்த நிமிடம் இராணுவ பட்டயங்களுடன் நடமாடியவர்கள் அடுத்த நிமிடம் இல்லை. அறைகள் எங்கும் சடலங்கள், எவரும் மரணங்கள் பற்றி எந்தக் கருத்தும் கூறாமலே பேயறைந்த நிலையில் இருக்கின்றார்கள். அடுத்த மரணம் அவர்களுடையது என்ற அச்சமே அவர்களை வாட்டுகிறது.

ஹிட்லரின் பிள்ளைகளை அழிக்கும் தாய் !

ஹிட்லரின் பிள்ளைகளுக்கு முதலில் மயக்க மருந்து கொடுக்கிறாள் தாய். அதில் வயது கூடிய ஒரு பெண் பிள்ளை மருந்தைக் குடிக்க மறுக்கிறது. எனினும் கட்டாயமாக பருக்குகிறார்கள். நான்கு மணி நேரத்தில் அம்மருந்து அவர்களை அதிக மயக்கத்தில் தள்ளும். அந்த நேரம் வந்த தாய் ஒவ்வொரு பிள்ளையின் வாயிலும் சைனைட் வில்லையை வைத்து முறித்து அவர்களுடைய மரணத்தை அவர்கள் அறியாமலே நிகழ்த்துகிறாள்.

அதன் பின்னர் அவளை முக்கிய தளபதி ஒருவன் சுட்டுக் கொல்கிறான். அவள் மீது பெற்றோலை ஊற்றி மற்றவர்கள் கொழுத்துகிறார்கள். ஒவ்வொரு மரணமும் நடைபெற அதற்கு அருகில் நாஜி படையினர் பெற்றோல் தாங்கிகளுடன் தயாராக நிற்கிறார்கள். அவர்கள் பெற்றோலை ஊற்றி அதிலேயே உடல்களை தகனம் செய்கிறார்கள். மரணத்தின் பின்னர் தமது உடல்களை எதிரிகள் காட்சிப் பொருள்களாகக் கூடாது என்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக செயற்படுகிறார்கள். இப்படி அனைவரதும் மரணங்கள் நிகழுகின்றன.

திரைப்படம் சொல்லும் கடைசிச் செய்திகள்.
u4.jpg
இறுதியில் யார் வெற்றிபெறுகிறார்களோ அவர்களால் சொல்லப்படுவதுதான் நீதி மற்றப்படி எதுவுமே கிடையாது. ஹிட்லரின் இதயத்திற்கும் ஒரு மறுபக்கம் இருந்திருக்கிறது, அதில் மறைபொருளாக ஓர் இரக்கம் யாருக்கும் தெரியாமல் கசிகிறது. மில்லியன் கணக்கில் மடிந்த யூதர்களுக்காகவும் அவன் கவலைப்படுகிறான். அந்தக் கொலைகளுக்கு தனது மன hPதியாக ஒரு நியாயத்தை அவன் தேடுகிறான். அதை உரக்கச் சொல்லிச் சொல்லி தன்னை நியாயப்படுத்துகிறான். போர் நதிக்குள் விழுந்தால் யாராக இருந்தாலும் அந்த வழியாகத்தான் பயணிக்க முடியும், வேறு வழியை தீர்மானிக்க முடியாது என்பதை கண்டு கொள்கிறான். அவனுடைய கைகள் எப்போதுமே ஆடிக் கொண்டிருக்கும். அவனுடைய சக்திக்கு அப்பால் காலத்தின் கை நழுவிச் செல்வதை பின்புறமாக வைத்திருக்கும் அவனுடைய கையின் ஆட்டம் புரிய வைக்கும். இருந்தபோதும் கடைசி மணித்துளிவரை அவனுடைய செயலை தவறொன யாரும் சொல்வதை அவன் அனுமதிக்கவில்லை.

மகாபாரதம் கதையில் வரும் கடைசி நேர முடிவுகள், இப்படத்திலும் வருகிறது. போரை நடாத்தியவர்கள் போர் பற்றி எதுவுமே தெரியாத தமது வாhPசுகளை காக்கத் துடிப்பது பாரதக் கதையில் ஒரு பாரிய பிரச்சனையாக வரும். இரு தரப்புமே வாhPசுகளை இழந்து தனிமரமாக நிற்பது பாரதக் கதையின் முடிவு. அதுபோல ஹிட்லருக்கும் அவருடைய தளபதிகளுக்கும் பிள்ளைகளாக பிறந்த குற்றத்திற்காக மரணிக்கும் சிறு குழந்தைகளின் நிலை கதையின் முக்கிய அவலப் பகுதியாக உள்ளது. மனிதனுக்கு அப்பாற்பட்ட தாக்கம் இந்தக்கதையின் பின்னால் சொல்லப்படாத நகர்வுகளாக ஓடுகின்றது. நீதி எங்கிருக்கிறது ? வெற்றி பெற்றவர்கள் ஹிட்லரைவிட சிறந்தவர்களா ? இந்த உலகம் யர்ருக்கு சொந்தம் ? பார்வையாளர் மனதில் கேள்விகள் எழுகிறது. தோற்றவர்களும் குற்றவாளிகளே ! வென்றவர்களும் குற்றவாளிகளே ! என்ற செய்தியை மௌனமாகச் சொல்லி இருனில் மறைகிறது கதை. புதிய உலகில் அணு குண்டைப் போட்ட அமெரிக்காவின் செயலை மறப்பதுபோல ஹிட்லரின் தவறுகளையும் மறக்கும்படி துர்ண்ட எடுக்கப்பட்ட படம் என்பதும் குறிப்பிடத்தக்;கது. எவ்வாறாயினும் அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்த படம்.
http://www.alaikal.com/net/index.php?option=com_content&task=view&id=47&Itemid=1

_____
CAPital

No responses yet

அடடா » தவறு

Sorry, you are not allowed to access this page.